Meeting with Shri. Gnanaprakasam
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்து பயிற்சி வகுப்புடன் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக சென்றது.
தமிழர் வேளாண்மையின் சிறப்பும் அதன் விளக்கத்தையும் ஐயா ஞானபிரகாசம் அவர்கள் சிறப்பாக விளக்கினார் அத்துடன் பண்ணை பார்வையிடல் கள அனுபவம் என பயிற்சி நிறைவாக இருந்தது. உழவு நடவுக்கு பின் அறுவடைதான் அதோடு அப்படியே உளுந்து பயிறு தெளிக்கலாம். வேளையல்லாமல் அதீத உழைபில்லாமல் எந்த இடுபொருளும் பூச்சுவிரட்டியும் கொடுக்காமல் வேளாண்மையை கையாள்வது எப்படி என பல விளக்கங்களும் அத்துடன் அவரது 40ஆண்டுகால சாட்சியாக இருந்த பண்ணையையும் பார்வையிட்டோம்.
மரபு மருத்துவம் சார்ந்த வகுப்பு நிறைய கற்றுக்கொடுத்தது. அத்துடன் தற்சார்பு கல்வி பற்றிய தொகுப்பும் அருமையாக இருந்தது. சிறப்பாக வழிநடத்தினார் ஐயா சரவணன்.
நிறைய மாவட்டங்களில் இருந்து பல நண்பார்கள் கலந்துகொண்டனர்.
#தமிழர்_வேளாண்மை
#வேலையில்லா_செலவில்லா_விவசாயம்
#Do_Nothing_Farming