Press "Enter" to skip to content

மியாவிக்கி உருவாக்கும் முறை

Santhosh Kumar 9

மரம்வளர்ப்பின் அடுத்தகட்டம்! குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவிக்கி. இவர் வகுத்த முறை தான் ‘இடைவெளி இல்லா அடர்காடு’ அதனால் மியாவாக்கி என ஆனது.

இந்த முறையில் உங்கள் தோட்டத்தில் சிறிய இடத்தில் முயற்சிக்கலாம். வீட்டு தோட்டத்தில் அல்லது காலியான இடத்தில் செய்து பார்க்கலாம்.

உருவாக்கும் முறை:
குறைந்தது ரெண்டரை அடி அல்லது மூன்றடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிவிட்டு, அதில் மரத்தூள், மக்கும் குப்பைகள், கழிவுகள், திடக்கழிவு உரம், ஏதேனும் உயிர் உரங்கள் கொண்டு நிரப்பலாம்.

மரக்கன்றுகள் தேர்வு செய்யும் முறை:
நெட்டை மரங்கள், குட்டை மரங்கள், கிளை பரப்பும் மரங்கள் எனக் கலந்து எடுத்துக்கொள்ளலாம். நாட்டு மர ரகங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
அந்த சூழல் அந்த ஊர் சார்ந்த மரங்கள் ஏதுவாக இருக்கும்.

நடவு  முறை:
2.5 சதுர அடிக்கு 1மரக்கன்று என நடவு செய்யலாம்.

காலநிலை:
இந்த முறையில் நடவு செய்ய ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம் தான் சிரியானது.

பயன்கள்

? வேலியைச் சுத்தி எட்டு அடி அகலத்தில் 3அடி பள்ளம் எடுத்து அமைக்கலாம். காற்றுத் தடுப்பானாக அமையும்.

?குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

?1000 சதுரடி நிலத்தில் 400மரங்கள்.

?பூமியில் வெப்பம் குறையும்.

?காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

?பறவைகளுக்கு வாழ்விடம் உருவாகும்.

?பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

?பத்து வருஷத்துல ஒரு மரத்துக்கு என்ன வளர்ச்சி கிடைக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும்னு ஆய்வு முடிவுகள் சொல்லுது.

?இந்த முறையில் உணவு காடு (food forest)ஐ 600 சதுர அடி இடத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான பழங்களை உற்பத்தி செய்யலாம். அதுவும் 6 மாதத்திலிருந்து…

அமைத்தவர்கள் விவரம்:
1.திருப்பூரில் 20சென்ட் இடத்தில் 2500 மரங்கள் நடவு செய்துள்ளார்கள்.

  1. திண்டுக்கல்லில் 30அடி நீளம், 16அடி அகலம், ஆறடி ஆழம் எடுத்து 200மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார்கள்.

காணொளி

https://m.facebook.com/Falconinternationaltrade/

  1. லோகேசுவரன் லோகேசுவரன்

    அருமையான பதிவு, இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்குமா

    • Santhosh Kumar Santhosh Kumar

      இன்னும் என்ன தகவல் வேண்டும் ஐயா?

  2. இத்ரீஸ் இத்ரீஸ்

    இந்த முறையில் உணவு காடுகள் வீட்டின் பின்புறம் அமைக்க விருப்பம் அதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான பழங்களை உற்பத்தி செய்ய மரக்கன்றுகள் தேர்வு செய்யும் முறை பற்றி விரிவாக கூறவும்

    அதாவது எந்த மரம் எங்கு வைக்கவேண்டும் என்பது பற்றி
    நெட்டை மரங்கள், குட்டை மரங்கள், கிளை பரப்பும் மரங்கள் எனக் கலந்து வைக்க 500ச.அ அளவிற்கான ஒரு மாதிரி படம் தேவை.

    • Santhosh Kumar Santhosh Kumar

      10000 சதுரடி தற்சார்ப்பு வாழ்க்கை என்னும் கட்டுரையில் சில படங்களும் விளக்கமும் இருக்கும் பார்க்கவும்…

  3. Moorthy Jayaraman Moorthy Jayaraman

    Nice Article,
    I have bought 1 acre land near Housr. I would like to plant 100 nos various trees around the fencing. Is it OK that I grow these 100 saplings in a small place ( ~ 300 sq ft) following the above method & uproot them once they are grown to around 6 ft high.
    Will the uprooted /relocated trees will grow well further?
    Need your expert opinion.

    • Santhosh Kumar Santhosh Kumar

      Ya sure. You can plan your small forest in this method.

    • Santhosh Kumar Santhosh Kumar

      உயிர்வேலி, 10000சதுரடி தற்சார்பு வாழ்க்கை, தமிழர் வேளாண்மை போன்ற பதிவுகளை பார்க்கவும்… நல்ல புரிதல் கிடைக்கும் மரம் வளர்ப்பில்…

  4. சாமுவேல் சாமுவேல்

    என் பெயர் சாமுவேல் மதுரை. எனக்கு அலங்காநல்லூர் அருகே 5.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது .மியாவாக்கி முறையமுறையில் காடு வளர்ப்பு பற்றி விவரங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். 9842181821.நன்றி.

Leave a Reply to Santhosh Kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.