மாடித்தோட்டம் அமைக்க செலவு செய்யாதீர்கள்.
தேவையான பொருட்கள்
வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமெண்ட் சாக்குகள், வாட்டர் கேன்கள், பைப்புகள், அண்டா குண்டா என அனைத்திலும் செடிகள் வளர்க்க முடியும். இவை ஏதும் இல்லாதவர்கள் விலை குறைந்த வளர்ப்பு பைகள் வாங்கி பயன்படுத்தலாம்.
நிரப்பும் முறை
காய்ந்த இலை தழைகளை முதலில் நிரப்பவும்.
அதன்பின் உங்கள் பகுதி மண், ஆடு அல்லது நாட்டு மாட்டின் எரு, இவற்றுடன் மணல். (எல்லாம் சமவிகிதம் கலந்து அதில் நிரப்பவும்).
வேப்பம் புண்ணாக்கு அல்லது கடலை புண்ணாக்கு இருந்தால் கலந்து கொள்ளவும்.
தவுடு, உமி, கரும்பு சக்கை இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.
விதைகள்
கூடுமானவரை நாட்டு ரக விதைகள் பயன்படுத்தவும். அவை தான் நமது சூழலை தாங்கி வளரும். பெரிய விதைகளை நேரடியாக நடவு செய்யலாம். சிறிய விதைகளை நாற்று விட்டு நடவு செய்வது நல்லது. அதற்கு கொட்டங்குச்சியை பயன்படுத்தவும்.
வீட்டில் உரம் தயாரிப்பு
சமையல் கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம். முட்டை ஓடுகளை தனியாக சேகரித்து அரைத்து வைத்து 2வாரத்திற்கு ஒரு கரண்டி என செடிகளுக்கு கொடுக்கலாம். மீன் கழிவுகளை ஒரு மூடிய பிளாஸ்டிக் கன்டெயினரில் எடுத்து சம்பங்கு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து 25 நாள் வைத்து உபயோகிக்கலாம். நன்கு பழுத்த பழம் சிறிது அழிகிய நிலையில் இருந்தால் அமையும் இதுபோல் வெல்லம் சேர்த்து உபயோகிக்கலாம். இதுவே போதும் வெளியில் வாங்காமல் எளிமையாக நாமே தயாரிக்கலாம்.