Raised Bed Cultivation
மேட்டுப்பாத்தி முறையில் தோட்டம் அமைத்தால் பல வருடங்களுக்கு உரம் என்பதே தேவையில்லை.
பாத்தி அமைக்கும் முறை:
3அடி அகலம், 10அடி நீலம் அளந்து அந்த இடத்தில் உள்ள மண்ணை சிறிது கொத்திவிடவும். பின்பு அமிர்த கரைசல் அதன் மேல் ஊற்றவும். சுற்றிக்கிடக்கும் மக்கக்கூடிய இழைதழைகளை எடுத்துவந்து பாத்தி மேல் போடவும் அதன் மேலும் அமிர்த கரைசல் ஊற்றவும். அதன் பின் 10அடி நீலம் உள்ள பக்கவாட்டில் ஒரு அடி அகலத்திற்கு மண் பறித்து அந்த மண் கொண்டு மூடவும் (மூடாக்குப் போல்). இது போல் இன்னொரு முறை இழைதழைகள் பின் அமிர்த கரைசல் ஊற்றி அதன் மேல் பக்கவாட்டில் உள்ள மண் இடவேண்டும். இதுபோல் எத்தனை பாத்திகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம். பாத்திகளை கிழக்கு மேற்கு அமைப்பது நல்லது. தினம் கிடைக்கும் சமையல் கழிவுகள் மற்றும் எளிதில் மக்கக்கூடிய கழிவுகளை பாத்திமேல் போடலாம். கீரைகள், காய்கறிகள் மற்றும் கொடி வகைகள் என அனைத்தும் இதில் பயிர் செய்ய முடியும். 3முதல் 4 வாரங்கள் கழித்து பாத்திமேல் விதைகள் விதைக்கவோ அல்லது நாற்று நடவு செய்யலாம்.
தண்ணீர் தேவை:
பாத்தி மேல் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. பக்கவாட்டில் எடுக்கப்பட்ட மண் மூலமாக சிறு வடிகால் உருவாகியிருக்கும் அதில் நீர் பாய்சினால் போதுமானது. இரண்டு பக்கமும் உள்ள நீர் ஒன்றரை அடி வரை செல்லும். ஆகையால் மூன்றடி அகல பாத்தியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.
செய்யக்கூடாதவை:
பாத்தி மேல் நடப்பதோ அதன்மேல் தண்ணீர் ஊற்றவோ கூடாது.
அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை:
சாணம்+கோமியம்+வெல்லம்.
சமபங்கு சாணம் மற்றும் கோமியம் அத்துடன் 20% வெல்லம் கொண்டு நன்கு கலக்க வேண்டும். தினம் காலை மாலை கலக்கிவிட்டு 3நாள் கழித்து பயன்படுத்தலாம். தண்ணீருடன் கலந்து உபயோகிக்கலாம்.
இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாக வாழுங்கள். மகிழ்வோடு இருங்கள்.
இருமடிப் பாத்தி . மேட்டுப்பாத்தி பற்றி மிகவும் எளிமையாக எழுதியமைக்கு மிக்க நன்றி . பாத்தியின் இரு ஓரங்களில் மட்டும் நாற்றை நடலாமா இல்லை மெய்யப்ப பகுதிகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாமா
மையப்
அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யலாம் ஐயா… கலப்பு பயர்களாக நடவு செய்யவும்… ஓரம் நடுபகுதி என அனைத்தையும் பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக முள்ளங்கி 45நாளில் அறுவடைக்கு வரும் மற்ற காய்கறிகள் 45வது நாளில் தான் பூக்கள் வைக்கும் ஆதலால் நெருக்கமாக நடலாம்… அது போல் அனைத்தும் கலவையாக நடவு செய்யுங்கள். நன்றி