Press "Enter" to skip to content

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை

Santhosh Kumar 25

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை

10000 sq.ft self sustainable living

10000 சதுரடி இடம் இருந்தால் போதும் ஒரு குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யமுடியும்.

இந்த முறையை முதலில் தோற்றுவித்தவர் ஸ்ரீபத் தபோல்கர். அவர் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 10000சதுரடி போதும் எனத் தெரிவித்துள்ளர். தற்போதைய சூழலில் இருக்கும் நவீன திட்டங்களுடன் இதை நான் சற்று மாற்றி அமைத்துள்ளேன். அந்த விவரங்கள் இதோ…

1000 சதுரடியில் வீடு
ஒரு சிறு குடும்பம் வசிக்க இந்த இடம் போதுமானது. அத்துடன் சாண எரவாயு களன் அமைத்து எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம். சிறிய ரக காற்றாலையும் சூரிய மின்சக்தி அமைப்பு நமது அன்றாட மின் உற்பத்திக்காக செய்து கொள்ளலாம். அத்துடன் மழைநீர் சேகரிப்பும் செய்து கொண்டால் இன்னும் சிறந்தது.

1000 சதுரடியில் மீன் குட்டை
இந்த குட்டை மழை நீர் சேமிப்பிற்காக பயன்படுத்தலாம், நாம் அற்றாடம் பயன்படுத்தும் தண்ணீரையும் இதில் சேமித்து பயன்படுத்தலாம். அத்துடன் மீன் வளர்க்கலாம் நமது உணவிற்காக. அத்துடன் அந்த குட்டை மேல் சிறிய அளவு கொட்டகை அமைத்து நாட்டுக்கோழி வளர்க்கலாம். அதன் கழிவு மீனின் உணவு.

3000 சதுரடியில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மூலிகைகள்

710 சதுரடியில் வட்டப்பாத்தி அமைத்து கீரை, காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை உற்பத்தி செய்யலாம். (வரைபடம் உள்ளது).

1296சதுரடியில் ஐந்து அடுக்கு விவசாய முறையல் 81 பயிர்கள் செய்ய முடியும். அதில் நமக்கான பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், கொடி காய்கள் என பயிரிடலாம். ( வரைபடம் உள்ளது)

600சதுரடியில் மியாவாகி முறையில் அடர் நடவாக நமக்கான பழத்தோட்டத்தை உருவாக்கலாம்.

250சதுரடியில் மிக முக்கியமான மூலிகைகளை வளர்க்கலாம்.

4000 சதுரடியில் உணவு தாணியங்கள், பயிர்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி

ஒரு போகம் 4000 சதுரடியில் நெல் அறுவடை செய்துவிட்டு அடுத்த 2000சதுரடியில் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யலாம்.மீதம் 2000சதுரடியில் சிறுதானியங்கள் பருப்பு வகைகள் பயிரிடலாம். அதன் பிறகு பருத்தி போடலாம். இதுபோல் சுழற்சி முறையில் மாற்றலாம்.

நல்ல வளமான மண்ணாக இருந்தால் 8சதுரடியில் 1கிலோ நெல் அறுவடை செய்ய முடியும் ஆகையால் இதுவே போதுமான இடம் தான்.

இந்த அமைப்பின் படி செய்தால் சிக்கனமாக குறுகிய இடத்தில் தற்சார்பு முறையில் ஒரு 4-5 நபர் கொண்ட குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஒரு நாளுக்கு 800 முதல் 1000லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

1000 சதுரடியில் கால்நடை பராமரிப்பு (மாடு மற்றும் ஆடு).
1-2 மாடு மற்றும் 4ஆடுகள் வளர்க்க 200சதுரடியில் கொட்டகை அமைத்தால் போதுமானது. 100சதுரடியில் ஹைரோபானிக் முறையில் சோளம் வளர்த்து கொடுக்கலாம். மீதம் இருக்கும் இடத்தில் தீவன புல் வளர்கலாம். அத்துடன் அசோலா வளர்க்க வேண்டும். அருகாமையில் மேச்சலுக்கு இடம் இருந்தால் நல்லது.

இந்த 10000சதுரடிக்கு உயிர் வேலியாக கால்நடை தீவனத்திற்கு பயன்படும் மரங்களை வளர்க்கலாம்.

ஒன்றின் கழிவு மற்றவைக்கு உணவு என்றும் வித்தில் பயன்படுத்த வேண்டும். காய்கறி கழிவுகள் மற்றும் சமையல் கழிவுகள் கால்நடைகளுக்கு உணவாகும், சாண எரிவாயு களனிற்கும் பயன்படும்.

இந்த முறைபடி இதுவரை யாரும் வாழவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கும் அதை அந்த சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளவும். இது ஒரு மாதிரி அமைப்பு தான். மாறுதலுக்கு உரியிது. இப்படி ஒரு வாழ்வியலை கையில் எடுக்க ஆவலாக உள்ளது. சிறய இடத்தில் இதை அனைத்தையும் ஒருங்கிணைத்து செல்லும் போது ஆட்கள் தேவை இருக்காது. குடும்ப உறுப்பினர்களே பார்த்துக் கொள்ளலாம்.

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி

      • பேரணி ஸ்ரீதரன் பேரணி ஸ்ரீதரன்

        வறுமையற்ற சமூகத்தை
        சமதர்ம பொருளாதாரத்தை
        இடர்கள் குறைந்த எளிமை நிறைந்த எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்வமைகொண்ட
        சமுதாயம் அமையப் பாடுபட வேண்டும் எனது நோக்கிற்கு தங்களின் கட்டுரை இதமான நிம்மதி தந்தது.
        மிக்க நன்றி
        பேரணி ஸ்ரீதரன்
        97873 00353

    • Santhosh Kumar Santhosh Kumar

      Ya sure … That real life will be peaceful & sustainable…

  1. சிறப்பான பதிவுக்கு நன்றிகள் பல.

    தெடர்பு எண் கிடைக்குமா ஐயா.

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி… 9965483828… அழைக்கவும்…

  2. சிறந்த வழி, நன்றி ,சகோ__/\__💐😊😇👨‍👨‍👧‍👦🐅🐘🐁🐿🐇🐦🐥💮🌹🌻🐚🌲🌳🍀🌿🌴

  3. Anonymous Anonymous

    மிகவும் அருமையான பதிவு
    இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
    மனம் ஆசை படுகிறது
    விரைவில் அந்த வாழ்க்கைக்கு இறைவன் நாடினால் மாறுவேன்

  4. Devi krishna Devi krishna

    மிக சிறப்பான பதிவு.
    நாங்களும் இதே மாதிரியான வாழ்க்கை முறைக்காக நிலம்தேடுகி ோம். ஆனால் outer la thaan cheap ah land kidaikkuthu. Athuvum dry land. No transport facilities.
    Searching good land with in our budget.
    Yours plan is nice. If we get land definitely will try this.
    Thanks.

    • Santhosh Kumar Santhosh Kumar

      வாழ்த்துக்கள்… முயற்சிக்கவும் நிச்சயமாக கிடைக்கும்

    • நான் நீர் மற்றும் வழி உடன் கூடிய நிலம் தந்து உதவுகிறேன் 984 534 7769

  5. VEERANARAYANAN VEERANARAYANAN

    Good Article

    • Santhosh Kumar Santhosh Kumar

      Thank you

  6. கவிராஜ் கவிராஜ்

    அருமையான யோசனை நண்பா.

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி. அனைவருக்கும் சென்று சேர்க்கவும்

      • Alwin Jose M Alwin Jose M

        Good message

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி

  7. மா.கந்தசாமி மா.கந்தசாமி

    மிக சிறப்பான பதிவு

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி ஐயா மகிழ்வோடு இருங்கள்

  8. முத்துச்சாமி முத்துச்சாமி

    மிகுந்த மகிழ்ச்சி குறைந்த வரிகளில் நிறைந்த தற்சார்பு வாழ்வியை உணர்த்தியதற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • Santhosh Kumar Santhosh Kumar

      நன்றி ஐயா தொடர்ந்து பயணிப்போம்

  9. Mubarak Mubarak

    Good but from Chennai..how we live like village… what is the alternative solution

    • Santhosh Kumar Santhosh Kumar

      தங்கள் பகுதியில் முடிந்தவரை என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் முயற்சிக்கவும் வீட்டில் சிறிய இடம் இருந்தால் தோட்டம் அமைக்கவும் அல்லது அருகாமையில் குத்தகைக்கு நிலம் கிடைத்தால் அதில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு தானியங்களை விளைவிக்கவும்

Leave a Reply to Santhosh Kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.