தமிழர் வேளாண்மை
தமிழர் வேளாண்மை என்றால் என்ன?
நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன.
வரப்பு அமைக்கும் முறை:
நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து 3அடி உயரத்திற்கு அமைத்து, 5லிருந்து 10அடி அகலம் வரை எடுக்கலாம் அத்துடன் நாலு பக்கமும் உள்முகம் 45 கோணத்தில் சரிவாக அமைக்க வேண்டும்.
மழை நீர் அறுவடை
கார்த்திகை ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழை நீரை அப்படியே நமது நிலத்தில் அறுவடை வரை கட்டி வைத்து மழை நீரையும் அறுவடை செய்யலாம். 1ஏக்கரில் 1அங்குலம் மழை நீரை நிறுத்தினால் அது 110டன் ஆகும் அப்போ 1அடி 2அடி மழை நீரை நமது நிலத்தில் நிறுத்தினால் எவ்வளவு நீரை நாம் அறுவடை செய்யலாம்? இந்த முறையில் செய்யும் பொழுது நிலத்தில் கட்டி வைத்திருக்கும் நீர் பூமிக்குள் உட்புகுந்து நிலத்தடி நீர் மட்டத்தை நமது நிலத்தடியில் உயர்த்தும். சீரான நீராவி போக்கு இருப்பதால் பருவமழையை மீண்டும் பொழிய வைக்க வல்லது.
நஞ்சையில் புஞ்சை
1ஏக்கரில் 75% நிலத்தை நஞ்சையாகவும் 25% நிலத்தை புஞ்சையாகவும் (வரப்பு எடுத்து) பயன்படுத்தலாம்… வரப்பில் 35தென்னை, 100வாழை, 20வகையான பழமரங்கள் அத்துடன் முருங்கை, ஒதியன், நுணா, அத்தி, இலுப்பை, புளியமரம், வேம்பு, புங்கை, பூஅரசு, நாட்டு கருவேல் மரங்களும் வளர்கலாம் மற்றும் கீரை காய்கறிகள் என எல்லாம் அதில் செய்யலாம்.
இதுக்கும் மேலே செய்யலாம், தென்னைக்கு நடுவே காட்டு மரம். உள் வரிசையில் மா, பலா, அத்தி, அதற்கு அடுத்து கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, நாரத்தை, கொலுமிச்சை, நெல்லி
சீதா மற்றும் கிழங்கு வகைகள், நிழல் இடங்களில் வல்லாரை, புதினா. கிடைக்கும் இடங்களில் பூ செடிகள், மூலிகை செடிகள், உயிர் வேலியாக காட்டு மரங்கள் நடுவே கலாக்காய். சாத்தியப்பட்டால் மரங்களில் மிளகு, வெற்றிலை, திப்பிலி கொடிகள்.
மழை வரவழைக்க:
வரப்பு எடுத்தால் மழை வரும். மழை இல்லாத ஊர்களில் தங்கள் நிலங்களில் இந்த முறையில் வரப்பு அமையுங்கள் 1-2 ஆண்டில் நீங்களும் மழை நீரை அறுவடை செய்யலாம்.
பொருளாதாரம்
இந்த முறையில் வேளாண்மை செய்யும் பொழுது காலப்போக்கில் நஞ்சையை விட வரப்பு பயிர்களின் லாபம் அதிகரிக்கும்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.
இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் அனைத்திற்குமான நிரந்திர தீர்வு…
1) நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த…
2) பருவ மழையை பொழிய வைக்க…
3) தண்ணீர் தட்டுபாட்டை போக்க…
4) நீடித்த வேளாண்மையை செயல்படுத்த…
5) அதீத உழைப்பில்லாமல் வேளாண்மையை செய்திட…
6) அதீத செலவில்லாமல் வேளாண்மை செய்திட…
7) களையை கட்டுபடுத்த…
8) மக்காத கழிவுகளைகூட எளிதாக மக்கவைத்து உரமாக பயன்படுத்த…
9) இரசாயணமில்லா மரவுவழி வேளாண்மையை செயல்படுத்த…
10) இயற்கை இடுபொருள் கொடுக்க வேண்டிய தேவையில்லை…
11) பூச்சிவிரட்டி அடிக்க தேவையில்லை…
12) மழையை வரவழைக்க…
13) மழைநீரிலேயே பயிரை அறுவடை செய்யும் முறை…
இதெல்லாம் சாத்தியமென்றால் அது தமிழர் வேளாண்மையால் மட்டுமே முடியும்.
இந்த முறையை நமக்கு அறிமுகம் செய்தவர் ஐயா ஞானப்பிரகாசம் அவர்கள்.
தமிழர் வேளாண்மை மற்றும் TNMIK ன் முகநூல் பக்கம்…
புதிதாக உருவாக்கிய இணையதளம் தற்போதுதான் எழுதி கொண்டு இருக்கிறேன்…
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
நன்றி🙏💐
– மு.சந்தோஃச் குமார்
Please give me aya contact number
Gnanaprakasham 9360551353
Very well done