5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம்.
இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக மழை நாட்கள் எப்படி பதிவாகின்றன?
புவி தோன்றிய முதல் ஒரு மரம் கூட இல்லை ஆனால் அப்போது மட்டும் பல வருடங்கள் தொடர்ந்து மழை பெய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போ மரம் இல்லாமல் மழை வரவழைக்க முடியுமா?
இப்பொது அனைவரும் மழை வேண்டி ஆங்காங்கே மரக்கன்றுகள் நடுகிறோம். ஆனால் இவை மழை வரக் காரணமாகாது…
மழை வரவழைக்க வனக்காடுகள் உருவாக்க வேண்டும். அந்த காடுகள் மிகவும் அடத்தியாக அதுவும் பால் வரக்கூடிய மரங்கள்(அத்தி, ஆலமரம், எருக்கன், சப்போட்டா, பலா, இன்னும் பல) அதிகமாக வளர்த்தால் கண்டிப்பாக மழை வரவழைக்க முடியும். நான் மேலே குறிப்பிட்ட அதிக மழை பொழியும் இடங்களில் பால் வரக்கூடிய மரங்கள் தான் அதிகம் உள்ளது.
“சூரியன் மண்ணுக்கு எதிரி மரத்திற்கு நண்பன்” எனும் கூற்றுப்படி காடுகள் இருக்கும் பட்சத்தில் மழையை ஈர்க்க முடியும்.
இந்த தகவல் அனைத்தும் பொள்ளாச்சி சென்ற போது “சட்டையணியா சாமியப்பன்” எங்களிடம் பகிர்ந்து கொண்டவை.
அதன்பின் தண்ணீர் பஞ்சம் இருக்காது. தண்ணீர்காக யாரிடமும் கையேந்த வேண்டாம். ஆழ்துளை போட அவசியம் இல்லை. நிலத்தடி நீரை உயர்த்த முடியும். அனைத்து நீர் நிலைகளும் நிரம்பும்.
இவர் தான் சட்டையணியா சாமியப்பன் மழையீர்ப்பு மையம் பற்றி விளக்கி கூறினார்… சென்ற வருடம் இவரை பொள்ளாச்சியில் சந்தித்தேன் மது ராமகிருஷ்ணன் 50ஏக்கர் வனத்தோட்டத்தில்…
அண்ணா உங்கள் கட்டுரைகள் அற்புதம்
நாம்
இலங்கையில் புங்குடுதீவு எனும் சிறு வரண்ட உவர்மண் கொண்ட தீவில். மரம்வளர்ப்பதில் முயன்று வருகிறோம். உங்கள் கட்டுரைகள் எங்களுக்கு ஒரு வரப்
பிரசாதம்.
நேரம் இருக்கையில் எங்கள் முகநூல் பக்கம் வந்து பார்வையிடுங்கள். https://m.facebook.com/groups/221042401976279?ref=share
மிக்க நன்றி… தொடர்ந்து இந்த தளத்தை பயன்படுத்தவும். இன்னும் பல கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பகிர உள்ளோம்… உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்…