Press "Enter" to skip to content

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார்

Santhosh Kumar 0

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார்

பேறாற்றலான இயற்கையின் படைப்பில் நமக்கு கிடைத்த மாபெரும் மனிதர்
ஐயன் கோ.நம்மாழ்வாரின் பிறந்த்தினம் இன்று.

பூவுலகின் நண்பர், இயற்கையை ஆழமாக உணர்ந்தவர், இயற்கையை அதன் வளங்களை பணமாக பார்க்கும் சமூகத்தில் அதனை உயிராக நேசித்து உணந்தவர், வளங்கள் அழிப்புக்கு எதிராக தனது கோபத்தை வெளிகாட்டியவர், எளிமையாக இயற்கையோடு வாழ்ந்து மாபெரும் மாற்றத்திற்கான விதையாக இருக்கிறார்.

நஞ்சில்லா உணவு, இயற்கை வழி வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி என அனைத்திற்கும் இவர்தான் அடித்தளம் அமைத்தார்.

இந்த உலகம் நமக்கானதல்ல அனைத்து உயிர்களுக்குமானது என்று என்னுள் ஆழமாக விதைதவர். ஐயனை நான் இதுவரை சந்தித்தில்லை அவர் இருந்தபோது அவரது அருமை தெரியவில்லை அப்போது நானும் அதீதமான இயற்கை நுகர்வில் இருந்தேன். அவர் மறைந்த பின் தான் அவரை பற்றிய புரிதலும் இயற்கைக்கு திரும்பும் பாதையும் புலப்பட்டது. அவர் வழி அவர் வகுத்த பாதையில் செல்ல வேண்டும். அதற்கான முயற்சியிலும் தேடலிலும் உள்ளேன். ஐயாவை நினைத்தாலும் சிந்தித்தாலும் உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறது. என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

இன்றைய சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஐயாவை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். அவர் யார் என்று தெரியாமல் இன்னும் நிறைய பேர் உள்ளனர். நமது வீட்டில் நமது பிள்ளைகளுக்கு அவரது வாழ்வை சொல்லி அவர் வழி நடப்போம்.

அவரது பாதையே எளிமையான முழுமைபெற்ற வாழ்வியலை இயற்கையுடன் இணைந்து வாழ வழிவகுக்கும்.

நம்மாழ்வார் மெல்ல நம்மை ஆழ்வார்.

மு.சந்தோஃச் குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.