மறைநீர்
Virtual water
கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர்
மறைநீர் என்றால் என்ன?
நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி உருவாகும் பொருள் தன்னகத்தே எடுத்துக்கொள்ளும் நீர் தான் மறைநீர்.
உலக பார்வை:
தண்ணீர் எல்லோருக்கும் பொது. உலகம் முழுமையும் தண்ணீரினை வணிகமாக பார்க்கும் மனோபாவத்தை உடைத்தெரியும் முக்கியமான பணி நமக்குள்ளது.
உலகம் தோன்றிய முதல் இன்று வரை நீர் ஒரு சொட்டுக்கூட குறையவும் இல்லை கூடவுமில்லை. ஏன் தட்டுப்பாடு?
தொழிற்புரட்சி:
தொழிற்புரட்சி ஏற்பட்டதில் இருந்து தான் நீர் தட்டுபாடு பிரச்சனை துவங்கியது.
ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கும்போது அரசு மக்களுக்கு எதிரே காட்டும் தூண்டில் புழு ‘வேலை வாய்ப்பு’. இந்த தோல் தொழிற்சாலைகளால் கூடுதலாக கிடைத்த வேலை வாய்ப்பு 5விழுக்காடு. ஆனால் பாலாற்றை சுற்றி இருந்த வேளாண்மை பாதித்ததால் வேளாண் தொழில் வாய்ப்பை இழந்தவர்களோ 85 விழுக்காடு. இங்கு 5 பெரிதா 85 பெரிதா என்று நகைச்சுவையாக கேட்க வேண்டியிருப்பது ஓர் அவல முரண்தான்.
சுவீடனில் சாயத் தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும் தொழிற்சாலைகளோ கிடையாது. ஏன்?
ஏன் சவுதி கோதுமை, சீனா பன்றி இறைச்சி, இஸ்ரேல் ஆரஞ்சு பழம் இறக்குமதி செய்கிறார்கள்?
மற்ற நாடுகளுக்காக நமது பாலாறு மற்றும் நொய்யல் ஆற்றை இழந்தோம்.
நாம் ஏற்றுமதி செய்யும் போது அந்த குறிப்பிட்ட பொருள் மட்டும் ஏற்றுமதி ஆகவில்லை அதனுடன் நமது வளமான நீரும் தான் ஏற்றுமதி ஆகிறது. ஆதலால் தான் மற்ற நாடுகள் நமது வளங்களை எளிமையாக சூறையாடுகிறது வணிகம் என்ற பெயரில்…
நீர் தேவை:
இன்றைய நிலையில் இந்தியாவின் 20கோடி மக்களுக்கு இன்னமும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை.
அடுத்த 25 ஆண்டுகளில் இப்போதைய அளவை விட 57% நீர் கூடுதலாக தேவைப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது
வருங்கால தலைமுறையினருக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அவர்களுக்கான நன்னீரை பாதுகாத்து சேமித்து வைப்பதே நம் முன் நிற்கும் பெருங்கடமை.
மறைநீரின் அளவு:
ஒரு கிலோ உணவுப் பொருள் உற்பத்தியாக எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு…
🍎1கிலோ ஆப்பிள் -822லிட்டர்
🌽1கி சோளம் -1220லி
1கி பார்லி -1425லி
1கி கோதுமை – 1830லி
1கி சோயாபீன்ஸ் – 2145லி
1கி அரிசி-2500லி
🐓1கி கோழி இறைச்சி – 4300லி
🐑1கி வெள்ளாட்டுகறி- 5500லி
🐖1கி வெண்பன்றி கறி- 10400லி
☕1கி காபி கொட்டை – 18900லி
1கி சர்க்கரை உருவாக்க 1780லி
🧀1கி வெண்ணெய் உருவாக்க 3180லி
🥚1கி முட்டை உருவாக்க 3300லி
👕ஒரு சட்டை தயாரிக்க 4300லி
ஒரு லிட்டர் பெட்ரோல் சுத்திகரிக்க 10லி
📖 பொதுவாக 1கி காகிதம் உற்பத்தி செய்ய 100லி. 1A4 தாள் உருவாக்க 30லி.
ஒரு டன் கம்பளி தயாரிக்க 100லி.
ஒரு டன் பைங்கூழ் (சிமெண்ட்) உற்பத்தி செய்ய 4500லி.
ஒரு டன் பழுப்பு இரும்பை எஃகாக மாற்ற 2000லிட்டர் தண்ணீர் தேவை.
ஒரு கோப்பை காபியின் மறைநீர் 140லி.
ஒரு ஆரஞ்சு பழத்தின் மறைநீர் 50லி.
விழிப்பு:
உலக மக்கள் தொகையில் சீனர்களின் தொகை 21%. ஆனால் அந் நாட்டின் நன்னீர் வளம் வெறும் 7% தான். ஆகையால் தான் குறைந்த அளவு நீர் தேவைப்படும் உணவுகளையே உற்பத்தி செய்வதுடன் பன்றி இறைச்சியை இறக்குமதி செய்கின்றனர்.
இதை புரிந்துகொண்டு ஏனைய நாடுகள் விழிப்படைந்து விட்டன. ஆனால் நாம் நமது அன்றாட தேவைக்குகூட இல்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.
அவளநிலை:
1.1 டன் எடையுள்ள ஒரே ஒரு காரின் மறை நீர் அளவு 4லட்சம் லிட்டர்தான். இந்த அளவானது 2000மக்கள் தொகை கொண்ட 5 கிராமங்களின் ஒரு நாள் புழங்குநீர் அளவுக்கு சம்மாகும்.
இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் அனைத்தும் நமக்கான நீர் தான்.
மூன்றாம் உலகபோர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும்.
நமது அன்றாட வாழ்வில் இதன் புரிதல்களை புகித்தி எளிமையாக வாழுங்கள் நமது சந்ததியினர் வாழ்வதற்கு வழிவகுப்போம்.
மறைநீர் பற்றிய எனது காணொளி:
https://m.facebook.com/story.php?story_fbid=2067712476588122&id=100000481695279
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
WhatsApp: 9965483828
Email: [email protected]
Website: www.agriculturalist.org
Facebook:
https://www.facebook.com/profile.php?id=100000481695279