ஒரு கிராமம் எனில் அது சுயசார்பாக தற்சார்புடன் அனைவரும் பங்களித்து இயற்கையுடன் வாழ வேண்டும்.
எல்லாம் உண்டு
எரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும்.
நீர் மேலாண்மை
நீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமியுங்கள், பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை தற்காலிக மழை நீர் அறுவடை செய்யும் பகுதியாக வடிவமைத்து நிலத்தடி நீரை உயர்த்தலாம்.
குப்பை மேலாண்மை
ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அமைத்து அதை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். எருவாயு களன் அமைத்து அனைத்து வீட்டிற்கும் அளிக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் கழிவை எருவாக பயன்படுத்தலாம்.
உணவு உற்பத்தி
அனைத்து விளை நிலங்களிலும் மரபு வழி வேளாண்மையை கையில் எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான உயிர்களுக்குமான உணவு தேவையை அங்கேயே உற்பத்தி செய்யலாம்.
கல்வி முறை
அங்கு படித்த அறிஞர் பெருமக்கள் அங்கு இருக்கும் சிறார்களுக்கு கல்வி போதிக்கலாம், கலைகள் சொல்லி கொடுக்கலாம்.
மாற்று சக்தி
சூரியமின் சக்தி மற்றும் காற்றாழை பயன்படாத்தலாம்.
மரபுத் தொழில்கள்
நிறைய குழுக்களாகப் பிரித்து மரபுத் தொழில்களை மேற்கொள்ளலாம் அதை சந்தைபடுத்த சங்கம் உருவாக்கலாம்.
கிராம்ப் பொருளாதாரம்
அந்த கிராமத்தில் உருவாக்கப்படுவதை அக் கிராமத்தில் முழுமையாக பயன்படுத்தி மீதம் உள்ளவற்றை அருகமையில் சந்தைப் படுத்தலாம்…
பங்களிப்பு வாழ்க்கை
அனைவரும் அவர்கள் தரப்பில் இருந்து அவர்களுக்கு தெரிந்த தொழில்களை, கலைகளை, நிலங்களை, பங்களிப்பாக தரலாம். கிடைக்கும் அனைத்தையும் அனைவரும் பங்கிட்டு எடுத்து பணமின்றி பங்களிப்பு வாழ்கை முறையில் பண்டமாற்று முறையில் வாழலாம்.
கிராமத்திற்கு திரும்புதல்
இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. சாத்தியமான ஒன்றுதான். கிரமத்திற்கு திரும்புதல் என்பது உயுரோட்டமான வாழ்க்கைக்கு திரும்புவது. இப்படி ஒரு வாழ்க்கை முறையால் மட்டுமே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். எல்லோரும் ஒற்றுமையாக இயற்கையின் அரவணைப்பில் வாழலாம். இதுவே நம்மாழ்வார் கண்ட, ஜே.சி.குமரப்பா கனவு கண்ட கிராம பொருளாதாரம்.
தினிமனித தற்சார்பைவிட கிராமே தற்சார்பில் இருப்பது மிகுதியான பலம் வாய்ந்தது.
ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மாற்றும்
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
WhatsApp: 9965483828
Website: www.agriculturalist.org
Fb: https://www.facebook.com/profile.php?id=100000481695279