Press "Enter" to skip to content

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

மாற்றுவழி
நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் மாற்று உள்ளது. அதை அறிந்து அதை பயன்படுத்துவது இயற்கையை சிதைக்காமல் உடலும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

அபாயம்
இன்றைய நோய்களுக்கும் இயற்கை சீரழிவுக்கும் நாம் அன்றாட உபயோகிக்கும் பொருட்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

சிதைவு
நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எந்த ஒரு பொருளும் எளிமையாக இந்த மண்ணால் மக்க கூடியதாக இருக்க வேண்டும். மாறாக இருந்தால் நாம் நம்மை காக்கும் கடவுளாகிய இயற்கைக்கு செய்யும் பெரிய துரோகம். அது நம்மையும் நமது சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கும்.

செயற்கை பொருள்
அன்றாட பயன்படுத்தும் பொருள்…
Paste, brush, soap, shampoo, hair oil, body lotion, face cream, hair dye, nylon artificial colored clothes & dress, plastic bags, kitchen appliances & utensils, concrete building, RO water, poisonous food, pooja items, furnitures, toys, games, snacks, mosquito coil, fertilizers, pesticides, medicines etc

இயற்கை பொருள்
மாற்று இயற்கை பொருள்…
பல்போடி, வேப்பங்குச்சி, குளியல்போடி அல்லது வழளைகட்டி, சீயக்காய், கேச தைலம் எண்ணெய், உடல் பொளிவு எண்ணெய், முகபூச்சு, இயற்கை சாயம், இயற்கை பருத்தியால் ஆன துணிகள் எ.கா கருங்கண்ணி பருத்தி, துணிபை, மக்கக்கூடிய பைகள், மண்பானை பொருட்கள், பித்தளை பொருட்கள், மரபு கட்டுமாணம், மழை நீர், இயற்கை உணவு, பூஜை பொருட்கள், மர சாமான்கள், விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள், கொசுவிரட்டி, இயற்கை உரம், பூச்சுவிரட்டி, மூலிகை மருந்துகள் இன்னும் ஏராளம்…

கிராம சூழல் – நாட்டு மாடு
இதுபோல் செயற்கைக்கு மாற்றாக இயற்கையாக நாமலே தயாரித்து அனைத்தும் பயன்படுத்தலாம். இதற்கு கிராம சூழலும் நாட்டு மாடும் இருந்தால் போதுமானது. நமக்கு தேவையான ஏனைய பொருட்கள் தயாரித்து ஆரோக்கியமான வாழ்வை எளிமையாக வாழலாம். மற்றவர்களுக்கும் கொடுத்து உபரி வருமானம் ஈட்டலாம்.

செயல்படுங்கள்
குழுவாக 5-10 நண்பர்கள் குடும்பத்திற்கு அவர் அவர் 5 பொருட்கள் என தயாரித்து அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்தில் தயாரித்து கிராமத்தில் சந்தை படுத்தலாம். கார்ப்ரேட் பொருளை பயன்படுத்தாமல் கிராம பொருளை பயன்படுத்தி ஆரோக்கியம் மற்றும் காரம்புற தொழிலையும் ஊக்குவிப்பதோடு கிராம பொருளாதாரத்தை தற்சார்பாக பூர்த்தி செய்யலாம்.

தற்சார்பு வாழ்வியல்
ஏற்கனவே 4-5 நபர் உள்ள குடும்பத்திற்கான உணவு, உடை, இருப்பிடத்தை 10000சதுரடியில் அமைப்பது பற்றிய பதிவை கூறியிருந்தேன். அதன்படி எளிமையான நிறைவான தற்சார்பு வாழ்வை வாழலாம்.

பொருள் செய்முறை விவரங்களை அடுத்த அடுத்த பதிவில் விவரமாக பதிகிறேன். சில காலம் பொறுத்திருங்கள். பகிர்கிறேன்.

மேலும் 10000சதுரடி தற்சார்பு வாழ்க்கை, மேட்டுபாத்தி முறை, ஜீரோ பட்ஜெட் மாடிதோட்டம், நாட்டு மாடு கிராமம் கொண்டு 40 பொருளின் பட்டியல், மரபு கட்டுமானம், தமிழர் வேளாண்மை போன்ற ஏனைய கட்டுரைகளுக்கு www.agriculturalist.org பார்க்கவும்.

தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
WhatsApp: 9965483828
Email.Id: [email protected]
Fb: https://www.facebook.com/profile.php?id=100000481695279

  1. Ponnumani Subramaniam Ponnumani Subramaniam

    useful…sustainable following.

    • Santhosh Kumar Santhosh Kumar

      Thanks lot

Leave a Reply to Ponnumani Subramaniam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.