தமிழர் வேளாண்மை தெரிந்து தற்சார்பு வேளாண்மை அடைவோம்.
தமிழர் வேளாண்மை பற்றிய முழு விளக்கம்.
தமிழர் வேளாண்மை முகநூல் பக்கம்.
https://www.facebook.com/groups/117140865770849/
ஏன் என்றால் தமிழன் தற்சார்பாகத்தான் வாழ்ந்து வந்தான்.
விதைப்பது அறுப்பது மட்டுமே தமிழர் வேளாண்மை எனில்…ஏன் இயற்கை வழி விளை பொருட்களுக்கு விலை அதிகம்.
யாரும் ஆதங்கபடவேண்டாம்.
இயற்கை பொருட்கள் சாமனியனின் துணை இல்லாமல் முன்னேற்றம் அடையாது.
95 சதவிகிதம் நபர்கள் செய்ற்கை பொருட்களே உண்கின்றனர்.
செக்கில் ஆட்டிய எண்ணெய் பரிசோதனை என்று அனைவரும் ஆதங்கப்படுகிறோம்,
காரணம் சாமனியன் பயண்படுத்தும் கலப்பட எண்ணெய் குறைந்த விலை , ஆகையால் , மக்களின் ஆதரவும் அதற்குதான் இருக்கும்.
தற்போது, உள்ள சூழலில், மக்கள் கொள்முதல் நலன் கருதியே இருக்க வேண்டும் இயற்கை உற்பத்திகள்.
இல்லேயேல், எந்த விவசாய சங்க தலைவர்களும் ஆதரிக்கப்போவதில்லை இதனை வெளிப்படையாக.
காரணம்… உணவைப்பற்றி புரிதல் வெறும் 5 சதவிகிதம் நபர்களே உள்ள சாமனியன் நாடுதான் தமிழ்நாடு.
இல்லையேல் சிறுதாணியங்களை இழந்து இருக்கமாட்டோம் என்பதை உணருங்கள். இயற்கை நமக்கு தெரியாமலே தந்தவை என்பதுதான் நிதர்சன உண்மை.
இதனை அனைத்தும், உணரவேண்டும்.
வேளாண்மை செலவுகளை குறையுங்கள்.
தமிழர் வேளாண்மை பற்றி திரு. ஞாணப்பிரகாசம் ஐயா அவர்கள் விழிப்புணர்வு செய்து வருகிறார்.
அனைவரும் ஓன்றுப்பட்டு, தமிழர் வேளாண்மையை முன்னெடுங்கள்.
உலகுக்கே தமிழன் வேளாண்மை கற்றுக்கொடுத்தான்.
செலவில்லா வேளாண்மை, மழையை அறுவடையை செய்து, முப்போகம் செய்தான்.
ஆச்சரியமாக உள்ளதா, ஆம் சிலர் சிரிக்கவும் செய்யலாம்.
இயற்கை எப்போதும் இயற்கை மழையைத்தான் பாலாக கேட்குமே தவிர, பூமிதாயின் மார்பை பிளந்து அவள் பாலை எடுத்து அவளுக்கே ஊட்டி வளர்ப்பது, வஞ்சகம் செய்யும் வேளாண்மை என்பதை உணருங்கள்.
தமிழர் வேளாண்மையில்..
முதல் போகத்தில் ஆடிபட்டத்தில் குறுவை சாகுபடி குறுகிய கால பூங்கார் போன்ற சாகுபடி செய்து, பின் நீண்டகால சம்பா ரகங்கள் சாகுபடி செய்து தையில் அறுவடை செய்து… அறுவடைக்கு முன்னே .. அந்த ஈரபத்திலே தாளடி சாகுபடியாக பருப்பு வகைகள் உளுந்து போன்ற பயிர்வகைகள் சாகுபடி செய்து அறுவடை செய்வதுதான் தமிழர் வேளாண்மை.. நம் முப்பாட்டான் செய்த மழைநீர் அறுவடை வேளாண்மை.
இதற்கு ஐயா, அவர்கள் பல்வேறு பட்டறிவும் மரபறிவும் வாழையடி வாழையாக கடத்தி வந்து நம்மிடம் சேர்த்து உள்ளார்.
தற்சார்பு வாழ்வியலை நோக்கி பயணியுங்கள்.
இயற்கை மற்றும் பல்லுயிர் வாழ்வியலின் தந்தை திரு.நம்மாழ்வார் ஐயாவின் வழிகள், மண் உயிர் சமூகத்தின் போராளி சட்டையில்லா சாமியப்பன் சொட்டு நீர்பாசனத்தை அறவே தவறு என்று இன்று வரை போராடுபவர், ஜீரோ பட்ஜட் திரு,சுபாஷ் பாலேக்கர் ஐயா வின் ஐந்தடுக்கு முறை.
மேலும், தமிழர் வேளாண்மையே அனைத்தையும் ஓருங்கினைக்கும் ஓர் நேர்கோட்டில் வைக்கின்றது..
திரு.ஞாணப்பிரகாசம் ஐயா அவர்களால் பாம்பரிய நெல் ரகங்களே தமிழர் வேளாண்மைக்கு சரி என்று ஆணித்தரமாக கூறிவருகிறார்.
விவசாயியை தற்கொலையில் மீட்க ஓரே வழி தமிழன் பட்டறிவு வேளாண்மைதான் மீள்பாதையே நோக்கி நகர்வோம்.
உயர் சாத்து வரப்பு அமைத்து பஞ்சபூதங்களை கட்டுக்குள் வைத்து நெல்லை அறுவடை செய்யும் தமிழனின் பாரம்பரிய முறைகள்.
மேலும், தமிழனின் வேளாண்மையை கடைக்கோடி சாமனியனுக்கு கொண்டு சேர்க்க ஆர்வம் உள்ளவர்கள் இனைந்து பயணியுங்கள்.
“இனி ஓர் உழவன் நிலத்தில் வீழ்வதை தவிர்ப்போம், அதற்கு பதில் நெற்கதிர்கள் விழட்டும் நிலத்தில்”
வயலே நீர் சேமிக்கும் கிடங்காக இருக்கும் போது தனியாக பண்ணை குட்டை தேவையில்லை.
பண்டைய தமிழர் வயலில் குட்டை வெட்டவில்லை மாறாக எரி குளம் வெட்டினார்கள், அதுவும் மழை நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கவே, அவர்களுக்கு விவசாயத்திற்கு பருவ மழையே போதுமானதாக இருந்திருக்கும்
மாட்டுக்குப்பை மேடும் / மணல்மேடும்:
அனைவரும் நஞ்சையோ ,புஞ்செய் அல்லது மானவாரி காடு 10 சென்ட் நிலமாக வாங்கி தற்சார்பு அடைவோம்…
காலத்தின் அவசியம் .
நகரமயமாக்கல் வரும் காலத்தில் நஞ்சில்லா உணவைத்தருமா அல்லது மரபனு மாற்று உணவை ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தரப்படலாம்.
மீள்
” உழவே தலை”