நெல்லுக்கும் மருத நீளத்திற்கும் உள்ள உறவு
பூமியின் எடையைகோள அளவில் சமன் செய்யவும்,
ஈர்ப்பு விசையுடன் சீராக சுழலவும் செய்ய, நீராதார சமன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில்;
பூமியின் எடையை சீராக வரையறை செய்வதிலும், மீட்டுருவாக்கம் செய்வதிலும்,
பருவ காலங்களை கால சுழற்சியில் மிகச் சரியாக உருவாக்குவதிலும், ‘வரப்புயர்த்திய- ஐந்திணைகளில் – ஒன்றான மருத நிலத்தின் பங்கு மகத்தானது’.
இதுவே பூமியின் வெப்பத்தைச் சீரமைக்கவும், வெப்பத்தைக் கடத்தி பூமியில் உயிர்ச் சூழலை உருவாக்கி உயிர்களை நிலைபெறச் செய்யவும் காரணமாயிற்று. இதற்காகவே புல்லினத்தைச் சேர்ந்த நெல்லைக் கையிலெடுத்தான் தமிழ் உழவன். புல்லே ஆயுதமாகி அவனே புவியைக் காத்து உயிர்களை பூமியிலே நிலைபெறச் செய்யும் வல்லவனாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதாக…
நெல் நீரை நிலை நிறுத்தி வைக்கும் வல்லமை கொண்டது.
பருவமழை பொழிய சீரான நீராவி போக்கு வேண்டும் அது நெல் பயிரில் சாத்தியம்.
அதுபோல் நிலைநிறுத்தும் நீரை புவியின் உட்பகுதிக்குள் மேல்லடுக்கு நீராக சேமிக்கலாம். நமது மரபு அறிவியல் கொண்டு முன்னோர்கள் முறையில் இதை செய்தால் நெல் ஒரு மகத்தானவை…
வளிமண்டலத்தில் இருக்கும் கரியமிலவாயுவை மிக குறுகிய காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உயிர்வளியாக மாற்றித் தரக் கூடியவை நெல் பயிர் தான்…
நமது டெல்டாவில் இன்னும் மேலடுக்கு நீர் சுழற்சி இருப்பதற்கு மிக முக்கிய காரணம் நெல் விவசாய முறைதான்… அதை இன்று நவீன வேளாண்மை நெல்லை பற்றி தவறுதலாக தகவல்களை பரப்பி நம்மை சிதைக்கிறார்கள்… பாரம்பரிய நெல் ரகம் அதீத மருத்துவ குணம் உடையது சூழலை தகவமைத்து வளரும் ஆற்றல் கொண்டது… ஆகையால் அதை தவிர்ப்பது நல்லதல்ல… நீர் சுழற்சி, சேமிப்பு, காற்று மாசு சுத்திகரிப்பு, மழை பெருதல், போன்ற மிக முக்கிய காரணிகள் உள்ளன… நெல் கொண்டு மிக அதிக அளவில் மழை நீரை அறுவடை செய்ய முடியும்…
நெல்லை கொண்டு புவியை காப்போம். மழையை பெறுவோம். நிலத்தடி நீரை உயர்த்துவோம். புவி சமநிலையை பாதுகாப்போம்.
இன்று நிலத்தடி நீர் இல்லை… அதை எப்படி மீட்பது? புவி வெப்பமாதல் எதனால் நிகழ்கிறது? அதை எப்படி தவிர்ப்பது? நிலத்தை எப்படி விரிவு படுத்துவது? புவி சுழற்சி எடையில் தான் உள்ளது? அதை எதை கொண்டு சமன் செய்வது? அதீத கரியமிலவாயுவை எப்படி சமாளிப்பது? மழை நீரை எளியமுறையில் எவ்வாறு சேமிப்பது? அதை எப்படி புவியுள் செலுத்துவது மற்றும் சீரான நீராவியாக மாற்றுவது? இவை அனைதிற்கும் வரப்புயர்த்தி நெல் சாகுபடி செய்வதற்கும் நிறைய தொடர்பு உள்ளது… மிக நுட்பமாக இயற்கையை உணருங்கள்…
மரபு முறையில் நஞ்சையில் புஞ்சையாக நெல்லை பல்லடுக்கு பயிர் சூழ தமிழர் வேளாண்மை முறையில் கட்டமைப்போம்.
தமழர் வேளாண்மை பற்றிய தொகுப்பு…
https://m.facebook.com/story.php?story_fbid=2346124398746927&id=100000481695279
மு.சந்தோஃச் குமார்