மரபுக் கல்வி
சுவரில்லா கல்வி முறை
தற்சார்பு கல்வி
இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது.
அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல.
ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும், அவரின் சித்தாந்தமான “சுவரில்லா கல்விமுறை” உயிர் பெற வேண்டும்.
நல்ல சமூகத்தையும் சமுதாயத்தையும் உருவாக்க மரபுக்கல்வியை மீட்போம். வேளாண்மை, கட்டுமானம், மரபுத்தொழில், மருத்துவம், கலைகள், வானியல் என அனைத்தையும் மரபுக்கல்வி வாயிலாக கொண்டு செல்வோம்.
கல்வி வர்த்தகம்
கல்வி வர்தகமானதால் மூளையை பிதிக்கி மதிப்பெண்களை வெளியே எடுக்கிறார்கள்.
இன்றைய நவீன உலகில் கல்வி என்ற பெயரில் தேவையில்லாத குப்பையை படிப்பதும் அறமில்லா சிந்தனையையும் உருவாக்குவதால், இயற்கை வள சிதைவும் சுரண்டலும், சமுதாய சீர்கேடு போன்றவை உருவாகுவதுடன் கால விரயமும் பண விரயமும் தான் மிச்சம். இறுதியாக ஏதேனும் பயின்றோமா என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் நிதர்சனம். அதை பெற்றோர்களும் பள்ளி கல்லூரி நடத்துபவர்களும் வர்தகமாகதான் பார்க்கிறார்கள்.
இலக்கு மதிப்பெண் மாயை
மதிப்பெண்களை வைத்து மனித மூளையை அளவிடுவது மடத்தனம்.
இலக்கு நோக்கிய பயணத்தால் என்னதான் கிடைக்கும்? மதிப்பெண் மோகத்தால் தன் இயல்பையும் சுயச்சிந்தனை அறிவையும் இழந்து எதிலும் திறன்பட செயல்படமுடியாமல் போகிறது. இலக்கு நோக்கிய பயணம் மனநிறைவை தராது அதனால் எதையும் வெல்லவும் சாதிக்கவும் முடியாமல் ஆபத்தை விளைவிக்கும்.
அனைத்தும் வீண்
எதையோ அடையப்போகிறோம் என்று நினைத்து அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர். அடிப்படை வாழ்வியலுக்கும் வாழ்க்கைக்கும் உதவாத கல்வியை பயின்று அதற்காக பல வருடங்களும் பல லட்சங்களும் செலவு செய்து இறுதியில் கிடைப்பது ஏமாற்றமும் மன உளைச்சலும் தான்.
இயற்கையின் புரிதல்
ஒரு குளவி எந்த மண் கொண்டு தனது கூடு கட்டவேண்டும்? ஒரு மரங்கொத்தி பறவை எந்த மரத்தை கொத்தி தனது இருப்பிடத்தை அமைக்க வேண்டும்? என அவைக்கு தெரியும். மற்ற ஏனைய உயிரினங்களும் அப்படிதான். மனிதர்களாகிய நாம் தான் நமக்கான வாழ்வியலில் இருந்து விலகி தேவையில்லாத பயன்படுத்தாத கல்வி முறையால் இயற்கையை புரிந்துகொள்ளாமல் தடுமாறுகிறோம்.
அடிப்படை வாழ்வியலுக்கு தேவையான உணவு உற்பத்தி, உடை, இருப்பிடம் அமைத்தல், மருத்துவம், கலைகள், வாழ்வியல், சிறுதொழில் மற்றும் கைத்தொழில் ஆகிய மரபுத்தொழில் பயின்றல், மரபு அறிவியல், பல்லுயிர் சுழற்சி, இயற்கை புரிதல் என பல்துறை வல்லுநராக அதுச்சார்ந்த கல்விமுறையாக மரபு அறிவியல் கொண்ட கல்வியாக இருக்க வேண்டும். இப்படி பட்ட கல்வி முறையால் தான் வாழ்வியல் சிறப்பாகவும் இயற்கையுடன் இயந்து வாழும் ஞானத்தை அடைய முடியும். ஒரு பழம் எப்படி கனியாகிறது அதன் வண்ணம் மற்றும் எடை மாற்றம் ஏன் ஏற்படுகிறது? மனம் என்றால் என்ன? பாலில் இருந்து நெய் எப்படி வருகிறது? இது போன்ற அன்றாட வாழ்வில் உள்ள எத்தனையோ கேள்வியை பதில் தெரியாமல் கடந்து செல்கிறோம். இனியும் அப்படி இல்லாமல் கல்வியறிவோடு வாழ்வோம்.
துறை மாயை
இந்த துறைதான் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என எந்த துறையையோ நாம் சிந்தித்து அந்த துறையில் நமது பள்ளைகளை வல்லுநர்கள் ஆக்க முற்சிக்கிறோம். ஏனெனில் அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட துறையும் இல்லை. இன்று கல்வி பயிலும் ஏனைய இளைஞர்கள் தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத வேலையில் தான் இருக்கிறார்கள். கல்வி வாழ்வியலுக்கு உதவுவதாகவும் யாரிடமும் அடிமையாக இல்லாமலும் தனித்திறமையுடனும் மனம் சார்ந்த இயக்கத்தையும் ஞானத்தையும் அடையக்கூடயதாகவும் இருக்க வேண்டும். அது மரபுக் கல்வியில் தான் சாத்தியம். மாறாக இயற்கையை சுரண்டி பணம் நேரம் என அதன் பின் ஓடும் அடிமையாக இருத்தல்கூடாது.
போலி கெளரவம்
அக்கம் பக்கம் பெருமையாக சொல்வதற்காக பெரிய கல்வி நிலையங்களில் சேர்த்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண்டாம். அந்த வெட்டி கௌரவத்தால் ஒரு பைசாவிற்கும் பலனில்லை.
தீர்வுதான் என்ன
ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை அரசு பள்ளியிலோ அல்லது தாய்த் தமிழ்ப் பள்ளியிலோ சேர்கலாம். நாமே நமது சிறார்களுக்கு சில பாடத்திட்டங்களை வகுத்து பயிற்சியளிக்கலாம். சில குடும்பமாக இணைந்து தங்கள் குழந்தைகளுக்கு மரபுக்கல்வியை போதிக்கலாம். இன்று சுவரில்லா கல்வி முறை, பானு வீட்டு கல்விமுறை, குக்கூ கட்டுப் பள்ளி என சிலர் மரபுக்கல்வியை தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் அதற்கான ஆயத்த பணியில் உள்ளனர். தலைமுறை வேண்டுமா மரபுக் கல்வியோடு பயணியுங்கள், தலைமுறை வேண்டாமா நவீன கல்வியை ஆதரியுங்கள். முழுமைபெற்ற கல்வியறிவு என்பது மரபில் உள்ளது. அதை மீட்டு நமது வரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து முழுமைபெற்ற வாழ்வியலை வாழ ஊக்குவிக்க வேண்டும். குழுவாக குடும்பமாக இணைந்து இந்த மரபுக்கல்வியை பயிற்றுவிக்க முற்படுங்கள். அதற்கான செயல்திட்டத்தில் இறங்குங்கள். நவீன மாயையில் இருந்து விடுபட்டு மரபுக்கல்விக்கு தரும்பி முழுமைபெற்ற கல்வியை கற்று பயனடையுங்கள்.
மரபுக்கல்வி சார்ந்த காணொளிகள்
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
புலனம்: 9965483828
மின்னஞ்சல்: [email protected]
வலைதளம்: www.agriculturalist.org
முகநூல்: https://www.facebook.com/profile.php?id=100000481695279