Press "Enter" to skip to content

இயற்கை ஆர்வலர் / தேனீ வளர்ப்பு / இயற்கைவழி வேளாண்மை / நாட்டுகோழி வளர்ப்பு

Santhosh Kumar 5

#இயற்கைஆர்வலர்
#தேனீ
வளர்ப்பு
#இயற்கைவழிவேளாண்மை
#நாட்டுகோழிவளர்ப்பு
#ஓவிய
ஆசிரியர்
#மரம்_நடுதல்

6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார்.

தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு உரம் தயாரிப்பு, கட்டுரை எழுதுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயிற்சி அளிப்பது என ஓயாமல் இயங்கும் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

இன்றைய காலகட்டத்தில் பலர் ஓய்வு பெற்ற பின் பயணம் பொழுதுபோக்கு என்று காலம் போக்குவார்கள். ஆனால் இன்றும் நம் ஐயா மிகவும் வித்தியாசமானவர். தினம் தனது வீட்டின் முகப்பில் இருக்கும் தகவல் பலகையில் அற்புதமான வாசகங்கள் எழுதி பலருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறார். பல மரங்களை நட்டு அதை தினமும் பராமரித்து, கால்நடைகளிடமிருந்து பாதுகாத்து அதற்கு தினமும் நீர் ஊற்றுகிறார். அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக தேனீ வளர்ப்பது அது சார்ந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மண்புழு உரம் தயாரித்து பல விவசாயிகளுக்கு கொடுப்பது, இயற்கையை அழக்காமல் சூழலை கெடுக்காமல் வாழ வேண்டும் என தன்னுடைய தொடர் கட்டுரைகள் மற்றும் ஓவியம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பல பள்ளி மாணவர்களுக்கு தொடந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தியும் வருகிறார். இப்படி பன்முக திறைமைகளுடன் ஓயாமல் மகிழ்ச்சியுடன் இயங்குகிறார்.

அன்பின் நிமித்தமாக ஐயாவை சந்தித்தேன். அன்பளிப்பாக அவர் வளர்க்கும் தேனீக்களிடம் இருந்து கிடைத்த சுத்தமான இயற்கையான தேனை கொடுத்தார்.

பல பள்ளிகளில் பணிபுரிந்தாலும் இவரது நினைவாக அங்கு சில மரங்கள் இவரது பெயரை கூறும். தனிமனிதனாக மரங்கள் வளர்ப்பு பற்றிய முக்கியதுவம், நெகிழி பற்றிய கெடுதல் என தொடர்ந்து விழுப்புணர்வு ஏற்படுத்துகிறார். அத்துடன் அது சார்ந்த பல ஓவியங்களை வரைந்தும், ஒவிய கண்காட்சிகள் வாயிலாக சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை பதிவு செய்கிறார்.

வாழ்த்துக்கள் ஐயா. தங்களது சேவை தொடர வேண்டும். நலமுடன் வளமுடன் இயற்கையின் பேராற்றலுடன் மகிழ்வோடு வாழுங்கள்.

  1. Pradeep Pradeep

    Excellent work Krishnan sir. May God bless you.

    • Santhosh Kumar Santhosh Kumar

      Thanks lot for your support.

  2. Giri Giri

    Sir
    Your article is very sketchy. You have never mentioned where you met him nor have you showed his drawing skills. Moreover you could have also posted his articles or links to his articles.
    Best Wishes Giri

    • Santhosh Kumar Santhosh Kumar

      Sorry for that… I met him nearby to my home town… His location is karaikal. And his contact number is 9751485141

  3. KAMAL NATH KUPPUSWAMY KAMAL NATH KUPPUSWAMY

    Very nice article it’s very informative, requesting you share the details group sustainable village practice would like to visit that village & will participate
    Thanking you
    Best wishes for your future endeavours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.