தொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு செய்ததுடன் அதில் சில கட்டுரைகள் நாளிதழ், மாதஇதழிலும் வெளிவந்தது.
இயற்கை வேளாண்மை, தமிழர் வேளாண்மை, உழவில்லா வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் வேளாண்மை என பல தளங்களில் விரிவடைத்தாலும் வேளாண்மை கொண்டு வாழ்வியலை வகிப்பதே அறமாகும்.
மழையீர்ப்பு மையம், மரபு தொழில்கள், கல்விமுறை, வேளாண் முறைகள், மரபு கட்டுமானம், மரபு அறவியல், 10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை, பங்களிப்பு வாழ்க்கை முறை, மூங்கில் வாழ்க்கை முறை, மண்பாண்டமும் மகத்துவமும் என சில முக்கிய கட்டுரைகளும் அடங்கும்.
நம்மாழ்வார், குமரப்பா, புகோகா, தபோல்கர், பாலேக்கர், பில் மோலிசன் போன்றவர்களின் சிந்தாந்தங்களை இந்த நவீன காலத்தில் எடுத்த செல்லும் ஒரு கருவியாக பயணிக்கிறேன்.
அதை ஊக்குவிக்கும் வகையில் 25-05-2019 முதல் 29-05-2019 வரை கோயம்பத்தூரில் நடந்த பசுமைபாதையின் வாழ்வியல் திருவிழாவில் சூழலியல் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளனர்.
தொடந்து இயங்க ஊக்கப்படுத்தி உள்ளார்கள். மரபு சார்ந்த இயற்கை வாழ்வியலுக்கான அனைத்து விதமான செயல்களையும் முன்னெடுப்போம் மரபு நோக்கி திருப்புவோம். அதை தொடந்த பல வழிகளில் பதிவு செய்வோம் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். நன்றி.