Press "Enter" to skip to content

ஊழியில் வாழ்வோம் – Virtual world (மாய உலகம்) – பருவகால அகதிகள்

Santhosh Kumar 0

ஊழியில் வாழ்வோம்

Virtual world (மாய உலகம்)

பருவகால அகதிகள்

வேகமாக மாறி வரும் வட துருவம்… மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலன்கள்?

கண்கள், மூக்கில் ரத்த கசிவால் அவதிப்படும் மக்கள்!

35மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்… பாதிப்பு இருக்குமா?

வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் கால்நடைகள் பலி…

பழங்குடியினர் காட்டிலிருந்து வெளியேற்றம்…

சமீபலகாலமாக பல யானைகள் உயிரிப்பு…

கடைசி உயிரினமும் உலகை பிரிந்தது என பல செய்திகள் வருகிறது. தெரியுமா?

மனிதர்களால் 10 லட்சம் உயிரினம் உயிரிழக்கும் ஆபத்து …

இன்னும் 31 ஆண்டுகாலம் தான் பூமியில் மனித இனம் இருக்கும்…

இனிவரும் காலங்களில் மேகங்கள் உருவாக சிக்கல்…

கோடி கணக்கான ஆண்டுகளாக உருகாமல் இருந்த பனிபாறைகள் உருகுகின்றன – கடல் நீர் மட்டம் உயர வாய்ப்பு!

பவளப்பாறைகள் அழிகின்றன!

ஏசி பயன்படுத்துவதால் பனிகரடியும் பென்குயின்களும் இறக்கின்றன…!

இவை எல்லாம் ஏதோ வாசகங்கள் அல்ல… கடந்த ஒருவருட காலம் பார்த்த சூழலியல் செய்திகள். எல்லாவற்றையும் வழக்கம்போல் கடந்து செல்லவும். உங்களுக்கு கவனம் செலுத்த பல பொழுதுபோக்குகள், பொருளாதார கணக்குள், நவீன பொருள் சார்ந்த வாழ்கைமுறை என ஓயாது ஓடுவதற்கும் ஈடுபடுவதற்கும் பல செயல்கள் உள்ளன.

மாய உலகம்

சூழலியல் பற்றிய விவாதங்கள், விழப்புணர்வு, அதற்கான செயல்திட்டம், தீர்வுகள் என முன்னோக்கி செல்லாமல் தேவையில்லாத அனைத்திலும் கவனம் செலுத்துவது நமது இருப்பை கேள்விக்குறி ஆக்கும் செயலே. அனைவரும் மாயையான உலகில் தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தி அதில் வாழ்க்கை நடத்த பழிகிவிட்டார்கள் அவர்களுக்கு இதை புரிய வைக்கவும் முடியாது விளக்கவும் இயலாது. உண்மையான மெய்யை உணர இயலாமல் மாயையில் சுழல்கிறார்கள். உண்மையற்ற செயல்களில் மகிழ்ச்சியை பகிர்கிறார்கள். Virtual world ஒரு ஆபத்தான மனநோய் நேரடியாக பிள்ளைகளை விளையாட விடாமல் mobile videogames கொடுத்து விளையாட அனுபதிப்பது பல பதிப்புகளை ஏற்படுத்துகிறோம். தேவையில்லாத செயலிகளுக்கு (Mobile Apps) அடிமையாக்குவது அதையே வாழ்வென மெய்யை உணராமல் இருப்பது. தேவையில்லாத செயலில் நேரத்தை செலவிடவது Trend ஆக்குவது (Nesamani issues) மிகப்பெரிய அடிமை சமூகத்தையும், கொஞ்சம் கூட மனம் சார்ந்த புரிதல் இல்லாமலும், வாழ்வியல் பற்றிய சூழலியல் சார்ந்த அறிவு இல்லாமல் உருவாக்கபடுகிறோம். இதில் இருந்து வெளிவந்து மெய்யறிவை உள்வாங்கி பயணிப்போம்.

பருகால அகதிகள்

வட நாட்டில் இருந்து பலர் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தங்கள் இயற்கை வளங்களை வளர்ச்சிக்கு தாரை வார்த்துவிட்டு உணவு இல்லாமல் நீர் இல்லாமல் உள்நாட்டிலேயே காலநிலை அகதிகளாய் வேறு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக செல்கிறார்கள்.

நமது பகுதியிலும் பல வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வளங்களை சூரையாட காத்திருக்கிறார்கள். வாழ்வியலை மாற்றாது இதற்கு விடை கிடைக்காது.

இருப்பது ஒரு பூமி காப்பது நம் கடமை

இங்கு சுவாசிக்க யாரும் பணம் தருவதில்லை. குறைந்தபட்ச நன்றியையாவது மரங்களுக்கு செலுத்தலாம். புதிய மரங்களை நடவு செய்வது, வெட்ட அனுமதிக்காது காத்தல், பராமரிப்பது என பழக்கத்தை மாற்றலாம்.

இந்த புவி நம்மிடம் எந்த பிரதிபலனையும் பாராமல் நமக்கு அருள்கிறது. அதற்காக நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாமல் புவிக்கு பொருந்தாத செயல்களை செய்யாமல் இருப்பதே பெரிய உதவிதான். சிறு நுகர்வு வாழ்க்கை முறைக்கு மாறுவதே புவிக்கு செலுத்தும் நன்றிகடன்.

அன்பே,
பொருள் படாதிரு,
பொருள் தேடாதிரு,
பொருள் கொள்ளாதிரு,
பொருளற்றிரு.

ஊழியை தடுக்கவோ தள்ளிபோடவோ சாத்தியம் இல்லை. ஊழியோடு வாழ பழகுங்கள். தப்பி பிழைப்பது சிறு கூட்டமாக தான் இருக்கும் அந்த கூட்டம் பழங்குடியினர் வாழ்வியல் முறையை பின்பற்றுவதாக இருக்கும்.

வாழ்வதற்கு
இயற்கையை புரிந்து ஊழியோடு வாழ பழகுவோம். அதை நமது சந்ததியினர்களுக்கும் கடத்துவோம். ஊழியை கொண்டாட காத்திருப்போம்.

மு.சந்தோஃச் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.