களிமண் குளிர்சாதனப் பெட்டி
டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும்.
மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைக்கும்.
15முதல் 20டிகிரி வரை வெப்பநிலையை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் ஆதலால் உள்ளே வைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சில நகரங்களில் நவீன மண்பாண்டம் விற்கும் கடைகளில் இவை கிடைக்கும்.