- புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும்.
-
இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது.
-
விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல.
-
விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல.
-
விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் மட்டுமல்லாமல், பூச்சிகள், பறவைகள், பிராணிகள் மேலும் மனிதர்களையும் முழுமையாக போஷிக்கும் செயலாக இருத்தல் வேண்டும்.
-
உண்மையான இயற்கை விவசாயத்தில் விவசாயியின் பணி மிகமிகக் குறைதல் வேண்டும். இயற்கையுடனான குறுக்கீடு மிகக் குறைவாக வேண்டும். இயற்கை தன்னுடைய வேலையை முழுமையாகச் செயவதற்கு ஏதுவாக அதை விட்டு விடவேண்டும்.
-
இயற்கை எல்லையில்லாதது. உலகமக்கள் தொகை இன்று இருப்பதை விட நூறு மடங்கு அதிகமானாலும் கூட இயற்கையால் முழுமையாக உணவளிக்கஇயலும்.
-
முழுமையான இயற்கை விவசாயம்- எந்த உரமும் தேவையில்லை- எந்த பூச்சி மருந்தும் தேவையில்லை- நீர்ப்பாசனமும் தேவையில்லை- பலவகைப்பட்ட தாவர இனங்களை ஒருங்கிணைத்து நடவுசெய்யும் செயலே அனைத்து மாயங்களையும் புரியும்.
-
நதிகள் பாசனத்திற்காக ஏற்பட்டவையல்ல; ஒரு மாபெரும் இயற்கை சமநிலையைப் பாதுகாக்கவும் தட்பவெப்ப, நீர்ப்பதங்கள், நீராதாரங்கள் சீர் நிலை பெறவும், அனைத்து நுண்ணுயிர்களும் தங்களிடையே பலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமே நதிகள் உள்ளன. பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களைப் போஷிக்கவும், நிலத்தடி நீர்வளம் பெற்று சமநிலை பெறவும், பிராணிகள், பறவைகள், மனிதர்கள் அனைவருக்கும் தேவையான அளவு குடிநீர் அளிக்கவுமே ஆறுகள் உள்ளன.
-
நீர்,அறிவாற்றலும் விழிப்பும் ஒருங்கே கொண்டஒரு உயிர்ப் பொருளாகும். இப் பூமியில் உயிரை உருவாக்குவதும் போஷிப்பதும் நீரேயாகும். பல்லுயிர்த் தன்மைகளயும் ஒருங்கிணைத்துப் பாதுகாக்கும் உன்னதச் செயலில் நதிகளின் பங்கு தனித்தன்மை வாய்ந்தமையால் அவை புனிதமானவையாகவும் தெய்வத்தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன.
-
தாவரங்களனைத்தும் காற்றிலிருந்து அதிகமாகவும், மண்ணிலிருந்து குறைவாகவுமே நீரை உட்கொள்ளுகின்றன. மரங்களிலிருந்து காற்றில் கிடைக்கப் பெறும் நீர்ப்பதமும், மழையினாலும், நதிகளாலும் கிடைக்கப் பெறும் நிலத்தடி நீருமே முழுமையான விவசாயத்திற்குப் போதுமானதாகும். மனிதர்கள் செய்யும் பாசனம் என்பது ஏரிகளைப் பாதுகாப்பதும், அதிக நீர்வரத்தை சமன்படுத்தகுளங்கள் போன்ற நீராதாரங்களை உருவாக்கிப் பாதுகாப்பதுமேயாகும்.
-
உண்மையான உற்பத்தி இயற்கையின் செயலே. மனிதன் உற்பத்தி புரிவதில்லை. இந் நிலையில் எவ்வாறு மனிதன் இயற்கை அளிக்கும் உணவை விற்கக்கூடும். பகிர்ந்து கொள்வது மட்டுமே சரியானது.
-
உலகில் ஒவ்வொருவருக்கும் கைக்கெட்டும் தூரத்தில் உணவு கிடைக்க வேண்டும். பண்ணைக்கும் சமயலறைக்கும் இடைப்பட்ட தூரம் மிகமிகக் குறையவேண்டும். அனுதினமும் உலகில் குறுக்கும் நெடுக்குமான உணவுப் போக்குவரத்து அறிவார்ந்த செயலாகாது. மாபெரும்சக்தி, வளங்கள், மனிதசக்தி அனைத்தின் விரயமாகும். மேலும் அது மிக ஆபத்தானதும் உலகை அதிக அளவில் மாசுபடுத்துவதுமாகும்.
-
எந்தவொரு நிலப்பரப்பிலும் பல் வகையான அதிக தாவர இனங்களையும் பிற உயிர்களையும் போஷித்துப் பாதுகாக்கும் ’கோளவடிவ ஒருங்கிசைவுத் தோட்டமுறை’ முழுமையான இயற்கை இசைவுத்தன்மை கொண்டு மனிதர்களையும், பிற உயிர்களையும் பாதுகாக்கும். அதே சமயத்தில் தன்னையும் பாதுகாத்துக் கொளும்வகையில் முழு இயற்கை இசைவுடன் இருக்கும்; அத்தகைய இசைவு மனிதர்களில் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் சீரமைக்கும் தன்மையுடன் எத்தகைய வியாதியையும் குணப்படுத்தும் திறனுள்ளதாகஇருக்கும்.
-
இந்தவகை அமைப்பு மனிதர்களை பல்வகை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், நோய் தீர்க்கவும் வல்லதாகும் அதே சமயத்தில் மனித சமுதாயத்தையும் பல்வகை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், நோய் தீர்க்கவும் வல்லதாகஇருக்கும்.
விரைவில் “கோளவடிவ ஒருங்கிசைவுத் தோட்டமுறை” பற்றிய கட்டுரையை பதிவு செய்கிறேன்.
மு.சந்தோஃச் குமார்
போன் செய்யுங்க 9629272185, தமிழர் வேளாண்மை பற்றி
பேச வேண்டும்
நல்லது ஐயா ஓரிரு வாரங்களுக்கு முன்பு தங்களை அழைத்து பேசி உள்ளேன் மற்ற விவரங்களை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்