கார்மேகம் மழையை கொட்டித் தீர்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் இந்த மாதத்தில் தெரியும் அவ்விண்மீண் கூட்டமே காரணம். எனவே அதனை கார் தீ என முருகன் அழைத்தான்.
பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவு
“வேவல், கதிரவன் விரும்பி செந்நிர ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்க தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு ஏதுமில்லை. அதேபோலதான் மயிலும் அது மழைவிரும்பி, கார்மேகங்கள் கூடத் தொடங்கியதும் குதூகலிக்கத் தொடங்கும், இறகு விரித்து தனது மகழ்வைக் கொண்டாடும். நெருப்பும் நீரும் போலதான் கார்த்திகையின் இன்னொரு குறியீடு இவை இரண்டும்.
காலத்தின் எதிரெதிர் முனைகள் வைத்துதான் முருகனைப் பற்றிய எல்லா கதைகளும்.
மு.சந்தோஃச் குமார்
வேள்பாரி புத்தகத்தில் படித்து போன்ற நினைவு….