வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள்
4000 ஓடைகளின் அழிவு
பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை தோட்டமாக மாற்றிவிட்டனர்.
அந்த புல்வெளி தேவையில்லாதவை என கருதி அழித்துவிட்டார்கள். ஆனால் அந்த புல்வெளிதான் அங்கு வனப்பகுதியில் பொழிந்த மழையை தன்னுள் சேமித்து தினமும் மிதமாக கசியவிடும். 80000 ஏக்கர் வனப்பகுதியில் அவை தினம் கசியவிடும் போது 4000ஓடைகள் உருவாகி ஆற்றுப்படுகையில் தண்ணீர் வந்தது. ஆனால் இன்று அந்த 4000ஓடைகளும் அழிந்துவிட்டன.
அதுவரை நம்மிடம் அந்த தேனீர் வகை புழக்கத்தில் இல்லை. அவர்கள் தான் அதை உற்பத்தி செய்து நம் உணவு மரபை மாற்றியதுடன் வளத்தையும் கெடுத்துவிட்டன.
இந்த 1லட்சம் ஏக்கர் வனப்பகுதியை 100 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் முன் அந்த ஒப்பந்தத்தை வட இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். தற்போது 100 ஆண்டுகாள ஒப்பந்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது, ஆனால் அதை நம்மிடம் ஒப்படைக்காமல் உள்ளனர். அவர்கள் வருட வர்த்தகம் மிகப் பெரியது, இதற்கு பல அரசு அதிகாரிகளும் உடந்தை.
அவர்கள் மேலும் 10000ஏக்கரை அழித்துவிட்டனர் தற்போது அவர்களிடம் 90,000 ஏக்கர் தேயிலை எஸ்டேடாக உள்ளது. அதை மீட்டு, திரும்பவும் பழையபடி வனக்காடுகளாக மாற்ற வேண்டும். அதன்பின் ஓடைகள் புத்துயிர் பெறும். மீட்டெடுத்து, இந்த வேலையில் இரங்கினால் முழுமையடைய எப்படியும் 10வருடங்கள் ஆகும். நம் வளத்தை அழிக்கவும் சுரண்டவும் நாம் இனியும் விடக்கூடாது.
மு.சந்தோஃச் குமார்
How goes it, great web page you’ve gotten presently.