ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்
இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்…
பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது.
என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை
நாம் இந்த பூமியில் நீடித்து நிலைத்து வாழ வேண்டுமா? அழிய வேண்டுமா? என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
நாம் இந்த பூமியில் நீடித்து நிலைத்து வாழ வேண்டும் என்றால் ஊர் திரும்பி எளிமையான மரபு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.
இல்லையேல் அழிவது உறுதி.
பங்களிப்பு வாழ்க்கை முறையே தீர்வு
நாம் ஒற்றுமையாக கூடி நமது இயல்பான திறனையோ, கற்றுக்கொண்ட திறனையோ நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்காக பங்களிப்பதே பங்களிப்பு வாழ்க்கை முறை.
பணம் தேவையில்லை
அரசாங்கம் தேவையில்லை
கார்ப்ரேட் தேவையில்லை என்பதை உணர வேண்டும்
பங்களிப்பு வாழ்க்கை முறையின் செயல்திட்டமே
“ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மாற்றும்”
One small town will change the world
எரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும்.
நீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமித்து, பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை தற்காலிக மழை நீர் அறுவடை செய்யும் பகுதியாக வடிவமைத்து நிலத்தடி நீரை உயர்த்தலாம்.
ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அமைத்து அதை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். எருவாயு களன் அமைத்து அனைத்து வீட்டிற்கும் சமையல் எரிவாயு அளிக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் கழிவை எருவாக பயன்படுத்தலாம்.
அனைத்து விளை நிலங்களிலும் மரபு வழி வேளாண்மையை கையில் எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான உணவு தேவையை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும்.
அங்கு படித்த அறிஞர் பெருமக்கள் அங்கு இருக்கும் சிறார்களுக்கு கல்வி போதிக்கலாம், கலைகளை சொல்லி கொடுக்கலாம்.
சூரியமின் ஆற்றல் மற்றும் காற்றாலை எரிசக்திக்கு பயன்படுத்தலாம்.
நிறைய குழுக்களாக பிரிந்து மரபுத் தொழில்களை மேற்கொள்ளலாம் அதை சந்தைபடுத்த கூட்டுறவுச் சங்கம் உருவாக்கலாம்.
அந்த கிராமத்தில் உருவாக்கப்படுவதை அக் கிராமத்தில் முழுமையாக பயன்படுத்தி மீதம் உள்ளவற்றை அருகமையில் சந்தைப் படுத்தலாம்…
❤️நமது முதல்கட்ட பணி என்னவென்றால் இந்த திட்டத்தை ஏற்க்கும் 5000 நபருக்கு உட்பட்ட ஒரு சிறு கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
❤️அடுத்ததாக இத்திட்டத்தை பற்றிய ஒருமித்த கருத்தை கிராம சபையை கூட்டி மக்களும் ஊர் தலைவரும் சேர்ந்து அறிந்துகொள்ளுதல்.
❤️கிராம மக்கள் மற்றும் ஊர் தலைவர் என அனைவரும் தமது ஒருமித்த கருத்தை தெரிந்துகொண்டபின் அதற்கேற்ப்ப தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்.
❤️நமது கிராமத்தில் உள்ள மக்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறது என்று கண்டறிகிறோம்.
❤️நமது கிராமத்தில் எவ்வகையான தொழில் தொடங்க சாத்தியமுண்டு என்று கண்டறிகிறோம்.
பிறகு நமது கிராம மக்களின் திறமைக்கு ஏற்றாற்போல் பல தொழில்கள் தொடங்க திட்டமிடுகிறோம்
❤️இவை அனைத்தும் கவனத்துடன் துள்ளியமாக திட்டமிடப்பட்ட வணிகமே, ஆனால் இப்போது இருக்கும் வணிகத்திற்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
❤️ஏனென்றால் இது நமது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது.
❤️நமது கிராமத்திலிருந்து இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் வாரத்தில்(ஞாயிறு) ஏதேனும் ஒரு நாள் மூன்று மணிநேரம் மட்டுமே பங்களிப்பர்.
❤️இது மிகவும் வலிமையான இலவசமான மிகப்பெரும் உழைப்பு சக்தியாக உருவாக்குகிறது.
❤️இப்போது தான் நமது திட்டத்தின் மிக முக்கியமான பகுதியைபற்றி பார்க்க போகிறோம்.
நாம் உற்பத்தி செய்வதில் நமது கிராம மக்களின் பயன்பாட்டுக்கு தேவையானதை கணக்கிட்டு, நமது தேவையைவிட குறைந்தது மூன்று மடங்கிற்கு மேல் உற்பத்தி செய்கிறோம்.
❤️இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் உற்பத்தியை சமமாக பங்கிட்டு இலவசமாக எடுத்துக்கொள்வோம்.
மீதமுள்ள இருமடங்கு உற்பத்தியை சந்தையில் விற்போம்.
❤️ஆனால் இங்குதான் ஒரு திருப்புமுனை, என்னவெனில் நாம் மற்ற வணிகர்களைவிட குறைந்த விலைக்கு கொடுப்போம்.
இது சாத்தியமே! எப்படியெனில் இலவசமான கூட்டு உழைப்பு சக்தி மற்றும் நமக்கு தேவையான மூலப் பொருட்கள் நமது திட்டத்தின் மூலமாகவே கிடைக்கும்.
❤️இத்திட்டத்தின் மூலம் பணம் முதலாளிதுவத்தை அழிக்கும் ஓர் அற்புதக் கருவியாக மாற்றம் பெருகிறது.
❤️நமது திட்டத்திலிருந்து விரைவாக கணிசமான அளவு பண வரவு அதிகரிக்கிறது.
இந்தளவு அதிகப்படியான பணவரவு நமது உணவு உற்பத்தி, தொழில்நுட்பம், மருத்துவம், இசை, நாடகம், சுற்றுலா முதலியவற்றிலிருந்து கிடைக்கிறது.
❤️இவ்வகையான அதிகபடியான பணவரவு முதலாளிதுவத்தில் சாத்தியமல்ல.
❤️நமது கிராமத்தில் வெறும் 50 வகையான தொழில்கள் மூலம் மட்டும் எவ்வளவு பணவரவு ஏற்படும் என்று திறந்த மனதுடன் கற்பனை செய்து பாருங்கள்.
❤️ஆனால் நாம் இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வது.நாம் நமது மொத்த வருமானத்தை மூன்று பங்காக பிரிக்கிறோம்.
❤️ஒரு பங்கை நிலம் மற்றும் கருவிகள் பங்களிப்பவர்களுக்கு கொடுபபோம்.
❤️இரண்டாவது பங்கை புதிய தொழில் தொடங்குவதற்கு பயன்படுத்துவோம்.
❤️மூன்றாவது பங்கை நமது திட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைவரும் சமமாக பங்கிட்டுக்கொள்வோம்.
❤️இதனால் ஒரு எளிமையான மாற்றத்தின் படியாக நாம் நமது வேலைகளை விட வேண்டிய அவசியமில்லை.
❤️ஏனெனில் அனைவரிடமும் பங்களிக்க வாரத்தில் மூன்றுமணி நேரம் உள்ளது.
❤️இத்திட்டத்தில் குறுகிய காலத்திலேயே நமது வேலையைவிட அதிக பணவரவு கிடைக்கும்.
ஆனால் அதே சமயம் தங்களுக்கு அன்றாட தேவையான பொருட்கள்
நம் திட்டத்திலிருந்து இலவசமாக கிடைக்கும்.
❤️நமது அன்றாட தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் பணம் மூன்றுமணி நேர பங்களிப்பிலேயே கிடைத்துவிடுவதால் பல்வேறு ஆபத்தான பணி செய்து கொண்டிருப்பவர்கள் அந்த ஆபத்தான பணியிலிருந்து விலகி விடுவார்கள்.
❤️இதனால் நாம் எதிர்ப்பு, போராட்டம், மோதல் போன்ற எதுவும் இன்றி இவ்வுலகுக்கு தேவையில்லாத கம்பெனி அமைப்புகள் தானாக மூடப்படுகின்றன. ஏனேனில் அங்கு வேலை செய்ய ஆட்கள் இல்லை.
❤️இதனால் பழைய வாழ்க்கை முறை மறைந்து பங்களிப்பு வாழ்க்கை முறை மலர ஆரம்பிக்கும்.
❤️பணம் என்பது தேவையில்லை என்பதை திட்டத்தின் இந்த படிநிலையில் நாம் புரிந்துகொள்வோம்.
ஆனால் இப்போது கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பணம் நம்மிடம் இருக்கும்.
❤️உலகில் பணம் ஒன்றும் செய்வதில்லை, நாம் தான் அனைத்தையும் செய்கிறோம் என்பதை உணர்கிறோம்.
❤️நம்மை அடிமையாய் வைத்திருந்த பணத்தை வைத்தே நாம் விடுதலை அடைகிறோம்.
❤️இதைவிட எளிமையான மக்களை இனைக்கும் திட்டம் வேறொன்றுமில்லை.
❤️சரி! எந்தச்சிறு கிராமம் இவ்வுலகை மாற்றப்போகிறது!
அது உங்கள் கிராமமாக இருக்கலாமே?
ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்
Would like to join village building activities
Kindly share the details
Love to follow above article system, do let me know will move to village