பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும்
உயர் வரப்பு நன்மைகள்
உடம்பு சரியில்லை காய்ச்சலாக இருந்தால் அதற்கான மருந்தை உட்கொண்டு குணப்படுத்துகிறோம். அந்த மருந்து உடலினுள் சென்று வேலை செய்கிறது.
தாகம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் அருந்துகிறோம். அந்த நீர் வயிற்றுக்கு சென்று உடலில் பரவி தாகத்தை தணிக்கிறது. நீர் அருகாமையில் இருந்தாலோ மேலே ஊற்றிக்கொண்டாலோ தாகம் தணியாது.
காய்சல் மற்றும் தாகம் இரண்டு செயல்பாடும் வெப்பத்தால் நிகழ்பவை…
அதுவே புவி வெப்ப காய்சலால் அவதியுற்றால் என்ன செய்வது?
புவி காய்சலில் அவதியுற்று சுடோறி உள்ளது. இந்த காய்சல், கொதிப்பு அல்லது தாகம் எப்படி சரி செய்யப்படும்?
பூமிக்குள் தண்ணீர் சென்றால் தான் அதன் தாகம் தீர்க்கப்படும். புவி மேல் இவ்வளவு பனிமலைகள் இருந்தாலும், 3பங்கு கடல் நீர் இருந்தாலும் புவி ஏன் குளிர்ச்சி அடையவில்லை?
புவிக்குள் நீர் சென்றால் மட்டுமே குளிர்ச்சிஅடைந்து அதன் சூட்டை தணிக்க முடியும்.
எரியும் நெருப்பை அணைக்க அதில் மிகுதியாக தண்ணீர் ஊற்றி நெருப்புடன் இரண்டறக் கலந்தால் மட்டுமே நெருப்பை தணிக்கமுடியும். பாத்திரத்தில் நீரை நெருப்பு மேல் வைத்திருந்தாலும், அருகாமையில் இருந்தாலும் நெருப்பை அணைக்காது.
நெருப்புக்குள் நீர் செல்லுவது போல, தாகத்திற்கு உடலுற்குள் நீர் செல்வது போல, காய்சலுக்கு மருந்து உடலுக்குள் செல்லுவது போல புவி வெப்பத்தை தணிப்பதற்கு புவிக்குள் நீரை செலுத்தியாக வேண்டும்.
குளம், குட்டை, ஏரி எல்லாம் புவி மேல் ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்த நீர் போன்றது ஒரு காலமும் புவி சூட்டை தணிக்க இயலாது.
அதனுள் இரண்டறக் கலக்க என்ன செய்ய வேண்டும்?
அதை எப்படி செலுத்துவது? ஆங்காங்கே துளையிட்டா அது சாத்தியமா?
கடல் நீரால் எந்த புல்லும் வளராது, பனிமலை நீரால் எந்த தாவரமும் தலைக்காது. புவியில் மண்ணுடன் இரண்டறக் கலக்கும் நீர் மட்டுமே புல் பூண்டுகளை உயிர்புடன் வைத்திருக்கும்.
மழைநீரை மிகுதியாக உள்வாங்குகிற அமைப்பாக மண்ணுடன் இரண்டறக் கலந்து புவி வெப்பத்தை சம்ப்படுத்தும் உயர் வரப்பு எனும் மிக பெரிய தொழில்நுட்பத்தை உழவன் செய்தான்.
வரப்புயர்த்தி உள்வாங்கு அதீத மழைநீர் எடையுள்ள பொருளாக பக்கவாட்டு விசையிலும், புவியீர்ப்பு விசையிலும் உள்ளே சென்று, புவிக்குள் நீரோட்டங்களாக மாறும். அதுவே மண்ணுள் நீர் அடுக்குகளாக உருவாகி பரவுகிறது.
உழவன் நிறுத்தும் நீர் தான் புவியில் பல்லுயிர்களுக்கான நீராதாரங்களாக உயர்புடன் இயங்க வைக்கிறது…
வேறு எந்த தொழில்நுட்பம் புவினுள் நீரை அதிக அளவில் உள்வாங்க முடியும்?
தமிழர் வேளாண்மை பற்றிய கட்டுரைக்கு
https://www.agriculturalist.org/articles/2018/04/317
நெல்லின் மகத்துவமும் முக்கியதுவமும்
https://www.agriculturalist.org/articles/2018/07/435
ஐயா ஞானபிரகாசம் அவர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம்
https://www.agriculturalist.org/articles/2018/01/167
தொகுப்பு:
முனைவர்.மு.சந்தோஃச் குமார்