தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்…
கிராமங்களை வாழவிடுவோம்
உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது.
சிமெண்ட், மங்களூர் ஓடுகள், விலை உயர்ந்த பாளிஷ் கற்கள், ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவற்றிற்குப் பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
மண்பாண்டக் கலைஞர்கள் அழிந்துவருகின்றனர்.
அரிசி ஆலைகளைவிட கரும்பாலைகளின் சர்க்கரை உற்பத்தி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
சினிமாவும், தேனீர்க்கடைகளும் கிராமங்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன.
கிராம்ப் பொருளாதாரம் சிதைந்து வருகிறது.
டாக்டர் குமரப்பா நமது நாட்டை மட்டுமல்ல; உலகையே எச்சரிக்கும் வகையில் ஒரு கருத்தை உரத்த குரலில் கூறினார். இயற்கையை, இயற்கை வாரி வழங்கும் பொருட்களை முறையாகவும், சரியாகவும், அளவோடும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். செயற்கை, வேதியல் உரங்களை மிகுதியாக பயன்படுத்துவதும், பூமிக்கு அடியில் இருக்கின்ற நீர் வளத்தை அடியோடு உறிஞ்சுவதும் சோலை வரங்களைப் பாலைவனங்களாக்ககுமென்றும், எதிர்கால சந்ததி திண்டாடும் என்றும் குறிப்பிடுகின்றார்.
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மூலம் காந்தியடிகள், டாக்டர் ஜே சி குமரப்பா கூறிய சுதேசி கொள்கைகளிலிருந்து வழிமாறி செல்கின்றது. உலகப் பொருளாதார நெருக்கடி, காலை சுற்றிய பாம்பாக கொத்த காத்திருக்கின்றது. இந்த நிலையில் நம்மை, உலகை காக்க காந்திய வழி சென்ற டாக்டர் குமரப்பாவின் அணுகுமுறை நமக்கு துணை நிற்கும்; கைகொடுக்கும்.
மனிதனை, மனித நலனை, உழைப்பை மையமாகக் கொண்ட பொருளாதார அணுகு முறையை பின்பற்றுவோம்.
“எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும்” என்றார் மகாகவி பாரதியார். அதனை செய்தவர் காந்தியடிகள். அதனை தொடர்ந்தவர் டாக்டர் ஜே சி குமரப்பா.