தேங்காய் மகத்துவம்
மருந்தில்லா மருத்துவம்
தேன்கனி கற்பகவிருட்சம்
இயற்கை உணவு
ஒரு முழுமையான தேங்காயை உங்கள் காலை உணவாக எடுத்துப் பாருங்கள். அதன்பின் உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.
“உணவே மருந்து, மருந்தே உணவு”, என்பதற்கு சிறந்த உதாரணமாக தேங்காயை குறிப்பிடலாம் இதுதான் மருந்தாகவும் உணவாகவும் வேலை செய்கிறது. தேங்காய் அற்புதமான உணவு. பண்டைய காலங்களில் இருந்து தேங்காய்க்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் தான் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் உணவிலும் தினம் தினம் தேங்காயின் பங்கு பிரதானமாக உள்ளது.
பொதுவாக தினம் இரு வேலை சமைக்காத இயற்கை உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான செயல். எந்த கட்டுபாடும் இல்லை போதும் என தோன்றும் வரை எடுக்கலாம். பழங்கள், காய்கறிகள் மற்றும் உலர் பருப்பு வகைகள் எடுக்கலாம். அதில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் தான்.
தேங்காயின் மகத்துவம்
உலகில் இருக்கும் உணவிலேயே தேங்காய் தான் முதல் தர உணவாக வகைப்படுத்தப்படுகிறது. உடனே உண்ணக் கூடிய உணவும் இதுதான். அனைத்து சத்துகளும் நிறைந்தது. அனைத்து வகையான நோய்களையும் தீர்க்க வல்லமை உடையது. உண்மையில் இதுதான் அமிர்தம். இதன் சுவை துவர்ப்பு. கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தது.
மனிதர்கள்-தேங்காய் ஒற்றுமை
மனிதர்களின் ஆயுள் எப்படி அதிகமோ அதுபோல் தென்னையின் ஆயுளும் அதிகம். மனிதன் உயர வளர்வது போல் தென்னையும் வளர்கிறது.
தேங்காய் சாப்பிடும் முறை
முழு தேங்காயை ஒன்றோ இரண்டோ வயிறு நிரப்பும் வரை காலையில் 7மணி முதல் 9மணிக்குள் உண்ண வேண்டும். துருவளாக, கீற்றாக நாட்டு சக்கரை அல்லது பனங்கருபட்டி அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பாலாக பிளிந்து பருகலாம் (பல் இல்லாதவர்கள் மட்டும்).
அதன்பிறகு இடையில் தேங்காய் பால் மற்றும் அதனுடன் காய்கறி அல்லது பழ சாறு கலந்து பருகலாம் (அனைவரும்).
பால்+சாறு தாயரிக்கும் விகிதம்
தேங்காய் பால் 2மடங்கு மற்ற பழசாறு 1மடங்கு என்னும் வகிதத்தில் பருகலாம். இது அனைத்திற்கும் பொருந்தும்.
எ.கா: தேங்காய் பால் 2குவளை + பீட்ரூட் சாறு 1குவளை. ( தேவைக்கு நா.சக்கரை, மிளகு, ஏலம், சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகளில் பீட்ரூட், கேரட், வழைத்தண்டு,வாழைப்பூ, முள்ளங்கி, அரசாணிக்காய், பூசணி, சுரை, கத்தரி, கொத்தவரை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை என அனைத்தும் பயன்படுத்தலாம்.
பழங்களில் நெல்லி, கருப்பு திராட்சை (பன்னீர்), மாதுளை, பப்பாளி, கொய்யா, வாழை போன்ற சதை அதிகம் உள்ள பழங்கள் பயன்படுத்தலாம். சாறு நிறைந்த பழங்கள் இதனுடன் கலந்து எடுக்க வேண்டாம்.
தினமும் காலை உணவாக தேங்காய் எடுத்தபின்பு 2மணி நேரம் கழித்து இதில் ஏதேனும் ஒன்றை சாறாக தே.பாலுடன் கலந்து பருகலாம்.
எந்த நோய்கள் இருக்கிறதோ அதற்கு தகுந்த காய்கறிகள் பழங்களை தே.பாலுடன் தினம் சுழற்சி முறையில் எடுத்துக் கொண்டால் விரைவில் மாற்றம் தெரியும்.
தேங்காய் பற்றி நிறைய தேடுங்கள் கிடைக்கும். இன்றைய நவீன மருத்துவம் நமக்கும் தேங்காய்கும் இருக்கும் பந்தத்தை பிரிக்கிறது.
தேங்காய் சாப்பிடுங்கள், ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
அலைபேசி: 9965483828
மின்னஞ்சல்: [email protected]
வலைதளம்: www.agriculturalist.org
முகநூல்:
https://www.facebook.com/profile.php?id=100000481695279